கம்பராமாயணம் 3614 · ஆரணிய 8.212

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''
பாட வேறுபாடு · Project Madurai reads
1'' ஆதலால் , முனிவாய் அல்லை ; அருந்ததி அனைய கற்பின்
காதலாள் துயரம் நீக்கித் தேவர்தம் கருத்தும் முற்றி ,
வேத நூல் முறையின் யாவும் விதியுளி நிறுவி , வேறும்
தீது உள துடைத்தி '' என்றான் , செம் அடி கமலம் சேர்வான் .

பொருள் · Meaning in Tamil

ஆதலால் - (நும்பிழையின் விளைவு இது) ஆதலால், முனிவாய் அல்லை - நீ சினம் கொள்வாயல்லை; அருந்ததி அனைய கற்பின் காதலாள் துயரம் நீக்கி - வசிட்டரின் மனைவியாகிய அருந்ததியை ஒத்த கற்பினை உடைய (உன்னைத் காதலிக்கும் மனைவியாகிய சீதையின் துன்பத்தைத் துடைத்து; தேவர்தம் கருத்தும் முற்றி - தேவர்களின், (அரக்கரை முழுதும் தொலைக்கும்) எண்ணத்தை நிறைவேற்றி; வேத நூல் முறையின் யாவும் விதியுளி நிறுவி - வேதங்களில் ஒழுக்கமாகக் கூறப்பட்டுள்ளவை யாவற்றையும் விதி நிலை நிறுத்தி; வேறும் உள தீது துடைத்தி - மற்றுள்ள தீங்குகளையும் நீக்குவாய்; என்றான் - என்றுகூறினான்; சேவடிக் கமலம் சேர்வான் - (அவனது) சிவந்த திருப்பாதமாகிய தாமரையைச் சேர்தற்கு உரியவனாகிய சடாயு.

'நீ சினவற்க. இனிச் செய்ய வேண்டுவது கற்பினுக்கரசியின் துன்பம் நீக்கி, அமரர் செய்த தவப் பயனை முற்றுவித்து, வேத முறைப்படி அனைத்தையும் நிலை நாட்டித் தீமையை அழித்து அறத்தை நாட்டலே என்று சடாயு இராமனிடம் கூறினான். அருந்ததி - வசிட்டர் மனைவி. சேவடிக் கமலம் - பரம பதம் என்பர். நீக்க, முற்றி, நிறுவி துடைத்தி என வினை முடிவு கொள்க. சேவடிக் கமலம் - உருவகம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Therefore you must not be angry; remove the sorrow of your beloved,
  2. whose chastity equals Aruntati's, fulfil the purpose of the gods,
  3. set all things firmly in place by the rule of the Vedas, and wipe away
  4. whatever other evil there is,' said he who was to reach the lotus of those red feet.

What the poem says

Caṭāyu's final counsel. Instead of anger, Irāmaṉ should end the suffering of Cītai, whose fidelity matches that of Aruntati, the wife of the sage Vacittaṉ and the model of the chaste wife; he should carry out the gods' wish that the demons be destroyed, re-establish order according to the Vedas, and remove all other evil.

The last line calls Caṭāyu 'he who would reach the lotus of the red feet', the lord's feet, meaning the supreme abode: he is about to die and attain liberation.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' ātalāl, muṉivāy allai; aruntati aṉaiya kaṟpiṉ
kātalāḷ tuyaram nīkkit tēvartam karuttum muṟṟi,
vētanūl muṟaiyiṉ yāvum vitiyuḷi niṟuvi, vēṟum
tītu uḷa tuṭaitti '' eṉṟāṉ, cēvaṭik kamalam cērvāṉ.