கம்பராமாயணம் 3616 · ஆரணிய 8.214
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆயபின் - இவ்வாறு சீற்றம் தீர்ந்த பிறகு; அமலன் தானும் - குற்ற மற்றவனாகிய இராமனும்; ஐய - (சடாயுவைப் பார்த்துத்) தந்தையே; நீ அமைதி என்ன வாயிடை மொழிந்தது அன்றி - நீ அமைதியாக இரு என்று (உன் வாயால் கூறியபடி அல்லாமல்; மற்று ஒரு செயலும் உண்டோ - வேறு நான் செயத்தக்க செயல்கள் ஏதேனும் உளதா (இல்லை என்றபடி); அவ்வரக்கன் போயது எங்கே புகல் என - அந்த அரக்கனாகிய இராவணன் சென்றது எங்கே (என்று) கூறுக என்று (கேட்க); புள்ளின் வேந்தன் - பறவைகளுக்குத் தலைவனாகிய சடாயு; ஓய்வினன் - தளர்ச்சி உடையவனாய்; உணர்வும் தேய - அறிதலுணர்வும் குறைய; உரைத்திலன் - (இராமன் கேட்டதற்கு) விடை ஒன்று கூற மாட்டாதவனாய்; உயிரும் தீர்ந்தான் - உயிரும் விட்டான்.
'நீ கூறியதை ஏற்றலே என் கடன், அது தவிர வேறு பணி எனக்கு இல்லை' என்று கூறிய இராமன் 'இராவணன் யாண்டையான்' என வினவினான்; சடாயு அதற்கு விடை கூறு முன்பே உயிர் விட்டனன். ஓய்வினன், உரைத்திலன் - முற்றெச்சங்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- After that, the Spotless One said, 'Father, apart from what your own mouth has spoken,
- telling me "Be calm", is there any other course for me?
- Tell me, where did that demon go?' But the king of birds,
- exhausted, his senses fading, could not answer, and his life left him.
What the poem says
Calmed, Irāmaṉ tells Caṭāyu, whom he calls father, that he will do nothing but what Caṭāyu has said. Then he asks the one thing he needs to know: where did Irāvaṇaṉ go?
But the old vulture king is spent. His awareness is ebbing, and he dies before he can answer, leaving the brothers without the clue they most need.