கம்பராமாயணம் 3617 · ஆரணிய 8.215

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சீதம் கொள் மலர் உளோனும் , தேவரும் என்பது என்னே ?
வேதங்கள் காண் கிலாமை , வெளிநின்றே மறையும் வீரன்
பாதங்கள் கண்ணில் பார்த்தான் ; படிவம் கொள் நெடிய பஞ்ச
பூதங்கள் விளியும் நாளும் போக்கு இலா உலகம் புக்கான் .

பொருள் · Meaning in Tamil

சீதம் கொள் மலருளோனும் - குளிர்ச்சி பொருந்திய தாமரை மலரில் தோன்றிய பிரமனும்; தேவரும் என்பது என்னே - பிற தேவர்களும் (காண அரியவன்) என்பதைச் சொல்ல வேண்டுவது எற்றுக்கு?; வேதங்கள் காண்கிலாமை - (தனது சொரூபலட்சணத்தை வெளியிடுவதற்கென்றே தோன்றியவையாகச் சொல்லப்படுகின்ற) வேதங்களும் காண முடியாதவனாய்; வெளிநின்றே மறையும் - (அவற்றின் வெளிப்புறத்திலேயே நின்று மறைகிற (சொரூபத்தை உடையவனாகிய); வீரன் - பெருவீரனான இராமனுடைய; பாதங்கள் - திருப்பாதங்களை; கண்ணின் பார்த்தான் - (தன்) கண்களால் தரிசித்தவனாகிய (சடாயு); நெடிய படிவம் கொள் பஞ்ச பூதங்கள் - பெரிய வடிவம் கொண்ட ஐம்பெரும் பூதங்கள்; விளியும் நாளும் - அழிகிற முடிவுக் காலத்திலும்; போக்கு இலா உலகம் - அழிதல் இல்லாத பரம பதத்தை; புக்கான் - அடைந்தான்.

பிரமனும் பிற தேவரும் காண முடியாத பரம் பொருள் என்பது என்? வேதங்கிடந்து தடுமாறும் வஞ்ச வெளியாக விளங்குகிற சொரூப லட்சணம் உடைய இராமனது திருவடிகளை இறுதியாகத் தரிசித்த புண்ணியத்தால் பஞ்ச பூதங்களும் ஒடுங்கும் கற்பாந்த காலத்திலும் அழிதல் இல்லாத பரமபதத்தைச் சடாயு பெற்றனன் என்க. சீதம் - குளிர்ச்சி. படிவம் - வடிவம். விளியும் - அழியும், போக்கு - அழிவு, காண்கிலாமை - எதிர்மறைத் தொழில் பெயர், இலா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். போக்கு இலா உலகம் - அழியாத பரமபதம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Why speak of him who dwells in the cool lotus, or of the gods?
  2. The hero whom even the Vedas cannot see, who stands in the open and yet stays hidden:
  3. his feet Caṭāyu beheld with his own eyes; and so, even on the day the vast, embodied five
  4. elements perish, he entered the world where there is no passing away.

What the poem says

Caṭāyu's death is a liberation. Irāmaṉ is the supreme being whom Piramaṉ and the gods cannot see, and whom even the Vedas, which exist to describe him, cannot grasp: he stands just outside their reach, in plain sight yet hidden.

Because Caṭāyu saw that lord's feet with his own eyes at the moment of death, he entered the supreme abode, the world that survives even the dissolution at the end of an age, when the five elements themselves are destroyed.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cītam koḷ malaruḷōṉum, tēvarum eṉpatu eṉṉē?
vētaṅkaḷ kāṇkilāmai, veḷiniṉṟē maṟaiyum vīraṉ
pātaṅkaḷ kaṇṇiṉ pārttāṉ; paṭivam koḷ neṭiya pañca
pūtaṅkaḷ viḷiyum nāḷum pōkku ilā ulakam pukkāṉ.