கம்பராமாயணம் 3618 · ஆரணிய 8.216

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வீடு அவன் எய்தும் வேலை , விரிஞ்சனே முதல மேலோர் ,
ஆடவர்க்கு அரசனோடு தம்பியும் , அழுது சோர ,
காடு அமர் மரமும் மாவும் கற்களும் கரைந்து சாய்ந்த ;
சேடரும் பாரினோர்க்கும் கரம் சிரம் சேர்ந்த அன்றே .

பொருள் · Meaning in Tamil

அவன் வீடு எய்தும் வேலை - அச் சடாயு பரமபதம் அடையும்காலத்தில், ஆடவர்க்கு அரசனோடு - ஆடவர் திலகனாகிய இராமன்தன்னோடு, தம்பியும் - தம்பியாகிய இலக்குவனும்; அழுது சோர - அழுது மெலிய; காடு அமர் மரமும் - காட்டில் உள்ள மரங்களும்; மாவும் - மிருகங்களும்; கற்களும் - மலைகளும்; கரைந்து சாய்ந்த - (இராமனின் சோகம் கண்ட இரக்கத்தினால்) கரைந்து தளர்ந்தன; விரிஞ்சனே முதல மேலோர் - பிரமன் முதலிய மேலுலகத்தவர்களும்; சேடரும் - கீழ் உலகத்தினராகிய நாகர்களும்; பாருளோரும் - (இடைப்பட்ட) நில உலகத்தில் உள்ள மக்களும், கரம் சிரம் சேர்த்தார் - (சடாயுவின் செயல் கண்ட மதிப்பினால்) கைகளைத் தலைமேல் சேர்த்து வணங்கினார்; அன்றே - ஈற்றசை.

இராமலக்குவர் சடாயுவின் இறப்பிற்கு அழுது தளர, இராமனின் சொரூபமாக உள்ள அனைத்தும் கரைந்து தளர்ந்தன. மூவுலகத் தவரும் சடாயு பரமபத மடைதலைக் கண்டு தலை மேல் கை குவித்து வணங்கினர். தன்னுயிரைப் புகழுக்கு விற்று இராம கைங்கர்யம் செய்து, திருவடிக் காட்சி பெற்று பரமபதமடைந்த சடாயுவை மூவுலகத்தவரும் தலை மேல் கை குவித்து வணங்கினர் என்பதாம். அமர்தல் - மேவல். சேடர் - கீழுலகத்தவர்களாகிய நாகர்கள். பாருளோர் - நிலவுலகத்தவர். விரிஞ்சனே - ஏகாரம் சிறப்புப் பொருள் குறித்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When he attained release, the heavenly ones headed by Viriñcaṉ,
  2. as the king among men and his brother wept and grew faint,
  3. as the trees, beasts and rocks of the forest melted and drooped,
  4. and the serpent folk below and the people of the earth all joined their hands above their heads.

What the poem says

At the moment Caṭāyu attains liberation, Irāmaṉ and Ilakkuvaṉ break down in tears. The forest shares their grief: trees, animals and even the rocks seem to melt and sag, because all things are forms of Irāmaṉ and feel what he feels.

Beings of all three worlds, the gods led by Viriñcaṉ, that is Piramaṉ, above, the Nāgas below and humans in between, raise joined hands over their heads in reverence to the vulture who gave his life for Irāmaṉ's cause and won the vision of his feet.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vīṭu avaṉ eytum vēlai, viriñcaṉē mutala mēlōr,
āṭavarkku aracaṉōṭu tampiyum, aḻutu cōra,
kāṭu amar maramum māvum kaṟkaḷum karaintu cāynta;
cēṭarum pāruḷōrum karam ciram cērttār aṉṟē.