கம்பராமாயணம் 3636 · ஆரணிய 9.9

Section ஆரணிய காண்டம் / 9. அயோமுகிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மடித்த வாயன் - (இராமன்) பிரிவுத் துயராலும், (இராவணன் மேல் கொண்ட) சினத்தாலும், கடித்த உதட்டினை உடையவனாய், வயங்கும் உயிர்ப்பினன் - வெளிப்பட்டு விளங்குகிற பெருமூச்சை உடையவனாய்; துடித்து வீங்கி ஒடுங்குறு தோளினன் - (மனத் துன்பத்தால்) துடித்து, (இராவணனை அழிக்க வேண்டும் என்பதால்) பூரிப்பு அடைந்து, (செய்வது அறியாமையால்) தளர்ந்த தன்மை அடைந்த தோள்களை உடையவனாய், மால் கரி ஒடித்த - மதயானை ஒடித்த (இராவணன்; பொடித்த தண் தளிர்ப் பூவொடு - சிறிதாக வெளிப்பட்ட குளிர்ந்த இலைகளையும் பூக்களையும் உடைய; கொம்பு அனையாள் திறத்து - கொம்பினை ஒத்தவளாகிய சீதையின் தன்மை பற்றி; உன்னுவான் - நினைத்தான்.

சினமும் துயரும், பெருமூச்சும் கொண்ட இராமன், வாய் மடித்து, பெருமூச்சு விட்டு, தோள் துடித்து ஓங்கி ஒடுங்கச் சீதையைப் பற்றி எண்ணத் தொடங்கினான் என்க. மால்கரி - இராவணனுக்கும், கொம்பு - சீதைக்கும், தளிரும் பூவும் - அவளது மேனி நிறத்துக்கும் உவமைகளாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Biting his lip, his sighs breaking out,
  2. his shoulders throbbing, swelling and then sinking,
  3. he thought of her who was like a branch, with cool young shoots and flowers just budding,
  4. broken off by a great rutting elephant.

What the poem says

Irāmaṉ's body shows his turmoil: he bites his lip in anger and grief, sighs heavily, and his shoulders twitch with pain, swell with the urge to destroy Irāvaṇaṉ, and then sag in helplessness.

He thinks of Cītai as a young flowering branch torn off by a rutting elephant. The elephant is Irāvaṇaṉ, the branch is Cītai, and its fresh shoots and blossoms stand for her delicate beauty.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṭitta vāyaṉ, vayaṅkum uyirppiṉaṉ;
tuṭittu vīṅki, oṭuṅkuṟu tōḷiṉaṉ,
poṭitta taṇ taḷirp pūvoṭu, māl kari
oṭitta kompu aṉaiyāḷ tiṟattu uṉṉuvāṉ.