கம்பராமாயணம் 3637 · ஆரணிய 9.10

Section ஆரணிய காண்டம் / 9. அயோமுகிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1'' '
''

பொருள் · Meaning in Tamil

வேலை வீங்கும் விரிதிரை ஆம் என - கடலில் மிகுந்து வருகின்ற பரந்த அலைகள் ஆகும் என்று சொல்லும் படியாக; ஓங்கி ஓங்கி ஒடுங்கும் உயிர்ப்பினான் - மேலும் மேலும் மிகுந்து அடங்குகிற பெருமூச்சினை உடையவனாகிய (இராமன்; வாங்கு வில்லன் வரும் வரும் என்று - (இராவணனிடம் இருந்து தன்னை மீட்க) வளைந்த வில்லினை உடைய (கணவன் வருவான் வருவான் என்று நினைத்து; இருபாங்கும் நீள் நெறி பார்த்தனளோ - இரு பக்கங்களிலும் உள்ள நீண்ட வழியைப் பார்த்துக் கொண்டிருப்பாளோ?; எனும் - என்று எண்ணினான்.

கடல் அலை போல் மீண்டும் மீண்டும் பெருமூச்சு விட்ட இராமன் வருவான் வருவான் என்று சீதை இரு பக்கங்களிலும் உள்ள நீண்ட வழியைப் பார்த்துக் கொண்டிருப்பாளோ என்று எண்ணினான். 'சுருதி நாயகன் வரும் வரும் என்பது ஓர் துணிவால் கருதி மாதிரம் அனைத்தையும் அளக்கின்ற கண்ணாள்' (5077) என்ற கவிக்கூற்று இங்கு ஒப்பிடத்தக்கது. வாங்குதல் - வளைத்தல், பாங்கு - பக்கம், நெறி - வழி, வரும் வரும் - அடுக்குத் தொடர்; வருவது உறுதி என்ற பொருள் குறித்தது. ஓங்கி ஓங்கி - அடுக்குத் தொடர் இடையீடு இல்லாமல் என்ற பொருளது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Did she keep watching the long road on either side, thinking,
  2. "He of the bent bow will come, he will come"?' he says;
  3. and like the spreading waves of the swelling sea,
  4. his sighs kept rising and rising, and sinking back.

What the poem says

Irāmaṉ imagines Cītai in captivity, scanning the long road in every direction, certain that her husband with his bow will come to rescue her.

His sighs rise and fall like the waves of the sea. The commentary compares a later verse in the Cuntara Kāṇṭam, where Cītai in Ilaṅkai is indeed described searching every direction with her eyes, sure that her lord will come.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' 'vāṅku villaṉ varum varum ' eṉṟu iru
pāṅkum nīḷ neṟi pārttaṉaḷō? '' eṉum;
vīṅkum vēlai viri tirai ām eṉa,
ōṅki ōṅki oṭuṅkum uyirppiṉāṉ.