கம்பராமாயணம் 3638 · ஆரணிய 9.11
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மின் நினைந்த விலங்கும் எயிற்றினான் - மின்னலைப் போல இடை விலகியுள்ள பற்களை உடைய இராவணன்; நில் நில் என்று நெருங்கிய போது - நில் நில் என்று கூறிக் கொண்டு நெருங்கிய போது; அவள் தன் நினைந்திலள் என்பது சாலுமோ - அந்தச் சீதை என்னை நினைக்கவில்லை என்று கூறுவது பொருந்துமோ?; என் நினைந்தனளோ - என்னைப் பற்றி என்னென்ன நினைத்தாளோ?; என எண்ணும் - என்று இராமன் எண்ணினான்.
'இராவணன் தன்னை நெருங்கிய போது சீதை என்னை நினைக்கவில்லை என எண்ணுவது பொருந்துமோ? அவள் என்னென்ன நினைத்தாளோ என்று இராமன் எண்ணினான். தன் என்றது ஈண்டு இராமனை; இதைச் சீதையைக் குறிப்பதாகக் கொண்டும் உரை கூறலாம். சாலுதல் - பொருந்துதல், என் நினைத்தனளோ - தன்னைக் காக்க வேண்டிய காலத்துக் காக்க வராமையால் மாரீசனின் மாயக் குரல் கேட்டு முன்னமே மனம் கலங்கி இருந்த சீதை யாது கருதினாளோ என்றபடி. விலங்குதல் - இடைவெளியுடன் அமைதல். நில் நில் - அடுக்கு சினக் குறிப்பினது. ஆல் - ஈற்றசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Could it be right to say she did not think of me
- when he whose teeth stand apart, flashing like lightning,
- came close to her, crying "Stop! Stop!"?
- What must she have thought then?' So he wonders.
What the poem says
Irāmaṉ pictures the moment of the abduction: Irāvaṇaṉ, with his gapped teeth gleaming like lightning, closing in on Cītai and shouting 'Stop! Stop!'
Surely she thought of her husband then. But what did she think of him? Already shaken by the false cry of Mārīcaṉ, perhaps she wondered why he had not come to protect her at the moment she needed him. The line can also be read as asking whether she thought of herself at all.