கம்பராமாயணம் 3640 · ஆரணிய 9.13
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பூண்ட மானமும் - (இராவணன் சீதையைக் கவர்ந்ததால்) தனக்கு ஏற்பட்ட அவமானமும்; போக்க அருங்காதலும் - (அவள் மீது கொண்ட) நீக்க முடியாத காதலும்; தூண்ட - தூண்டுதலினால்; இடைநின்று - நடுவில் நின்று; தோமுறும் - துன்பம் அடைகிற, ஆர் உயிர் - (தன்) அருமையான உயிரை; மீண்டு மீண்டு வெதுப்ப - (அவை - அவமானமும், காதலும்) மாறி மாறி வருத்துவதனால், வெதும்பினான் - மனம் வருந்தினவனாகிய (இராமன்); எனக்கு இன்னமும் வில் வேண்டுமோ என்பான் - எனக்கு இனிமேலும் (கையில்) வில் வேண்டுமோ என்று கூறினான்.
அவமானமும் காதலும் தேய் புரிப் பழங்கயிற்றைப் பற்றிய இரு யானைகள் போலத் தன் உயிரை அலைக்கழித்தலால் பெருந்துன்பம் கொண்ட இராமன், சீதையைக் காப்பாற்ற உதவாத வில் இன்னமும் என் கையில் வேண்டுமோ என்றான். தோமுறுதல் - துன்பம் அடைதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The shame he had taken on and the love he could not drive away
- urged him on by turns, and his precious life, suffering caught between them,
- was scorched again and again, and he burned;
- 'Do I need a bow any longer?' he says.
What the poem says
Two feelings pull Irāmaṉ's soul in opposite directions, like two elephants tugging at a frayed old rope: the dishonour of having his wife stolen, and his unending love for her.
Burned by both in turn, he turns on himself: what use is his famous bow if it could not protect Cītai? Should he even carry it any more?