கம்பராமாயணம் 3641 · ஆரணிய 9.14
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தொல் மறை எல்லை நோக்கினர் யாவரும் நோக்குவான் - பழமையான வேதங்களின் முடிவை அறிந்தவர்கள் எல்லாம் (இவனே பரம் பொருள் என்று) நோக்கி நிற்கிற தன்மையுள்ள இராமன்; வில்லை நோக்கி நகும் - (தன் கையில் உள்ள) வில்லைப் பார்த்து (இது பயன்படவில்லையே எனக் சிரிப்பான்; மிக வீங்கு தோட் கல்லை நோக்கி நகும் - மிகப்பருத்த தன் தோளாகிய கல்லைப் பார்த்து (இதன் வலிமை சீதையைக் காக்கவில்லையே) என்று சிரிப்பான்; கடைக்கால் வரும் சொல்லை நோக்கித் துணுக்கெனும் - முடிவில் (மனைவியைக் காக்க இயலாதவன்) என்று தனக்கு வருகின்ற பழிச் சொல்லை எண்ணிப் பார்த்துத் திடுக்கிடுவான்.
வேதாந்த வித்தகர்களால் பரம் பொருள் இவனே என்று உணரப்பட்ட இராமன், தன் மனைவியைக் காத்தற்குப் பயன்படாத தன் வில்லையும் தோளையும் பார்த்துச் சிரித்து, இறுதியில் தனக்கு வரும் பழிச் சொல்லை எண்ணித் திடுக்கிட்டான் என்க. கடைக்கால் - முடிவில், துணுக்கெனல் - வருந்தித் திடுக்கிடல். தோட்கல் - உருவகம், கல் - ஆகுபெயர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He looks at his bow and laughs; at the great swelling rock of his shoulders
- he looks and laughs; at the word of blame that will come at the last
- he looks and shudders: he on whom all who have seen the farthest bounds of the ancient Veda
- fix their gaze.
What the poem says
Irāmaṉ laughs bitterly at his bow and at his rock-like shoulders, both useless when his wife needed them. Then he thinks of what people will say of him in the end, a man who could not protect his own wife, and he flinches.
The irony is underlined in the last line: this helpless, self-mocking man is the one whom the sages who have mastered the Vedānta recognise as the Supreme Being.