கம்பராமாயணம் 3643 · ஆரணிய 9.16

Section ஆரணிய காண்டம் / 9. அயோமுகிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''

பொருள் · Meaning in Tamil

நின்று - (அரக்கர்களை எதிர்த்து) நின்று; பல் உயிர் காத்தற்கு நேர்ந்த யான் - (உலகில் உள்ள) எல்லா உயிர்களையும் காப்பாற்றுவதற்கு உடன்பட்ட நான்; ஓர் ஏந்திழை என் துணைக் குலமங்கை தன் - சிறந்த அணிகலன்களை அணிந்த என் மனைவியாகிய ஒரு குலப் பெண்ணினது; துயர்க்குத் தகவு இலென் ஆயினேன் - துன்பத்தை நீக்குவதற்குத் தகுதியுடையவன் அல்லேன் ஆயினேன்; என் வலி நன்று நன்று - என் வலிமை மிக நன்றாய் இருக்கிறது; என நாணும் - என்று (எண்ணி) நாணமடைவான்.

உலகெலாம் காக்க ஒருப்பட்ட நான் ஒரு பெண்ணின் துயர் காக்க முடியாதவன் ஆய்விட்டேன். என் வலிமை நன்று நன்று என இராமன் நாணம் கொண்டான். பல்லுயிர் காத்தற்கு நேர்தல் -

"சூர் அறுத்தவனும், சுடர் நேமியும் ஊர் அறுத்த ஒருவனும் ஓம்பினும் ஆர் அறத்தினொடு அன்றி நின்றார் அவர் வேர் அறுப்பென்; வெருவன்மின் நீர் என்றான். (2652)

என்ற பாடல் கொண்டு அறிக. நன்று நன்று - அடுக்குத் தொடர் இகழ்ச்சி பற்றி வந்தது. ஆல் - ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'I, who undertook to stand firm and protect all living beings,
  2. for one lady of fine jewels, my companion, a woman of noble family,
  3. have proved unfit even to end her sorrow;
  4. fine, very fine, this strength of mine!' And he is ashamed.

What the poem says

Irāmaṉ recalls his promise to the forest sages that he would destroy any demon who threatened them, even one protected by the great gods. Yet the man who vowed to protect every living being could not save one woman, his own wife.

'Fine, fine is my strength!' is bitter self-mockery, and he is overcome with shame.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' niṉṟu pal uyir kāttaṟku nērnta yāṉ,
eṉ tuṇaik kulam maṅkai or ēntu iḻai
taṉtuyarkkum takavu ileṉ āyiṉēṉ;
naṉṟu naṉṟu eṉ vali! '' eṉa nāṇumāl.