கம்பராமாயணம் 3645 · ஆரணிய 9.18
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
திரு மலர்க்கண் இமை - அழகிய தாமரை மலர் போன்ற (தன்) கண்களின் இமைகள், (இமைக்கும் காலத்தில்), ஆயிரம் கற்பங்கள் பொருந்தப் போக்குவான் - ஆயிரம் கற்பாந்த காலங்களை முழுதும் பொருந்தக் கழிப்பவனாகிய (இராமன்); இருந்தும் கங்குலின் ஈறு கண்டிலன் - (தம்பியமைத்த தளிர்ப் படுக்கையில்) இருந்தும் இரவினது முடிவைக் காணாதவனானான்; பிரிந்த ஏதுகொல் - (இந்நிலைமைக்குச்) சீதையைப் பிரிந்தது காரணமோ? பேர் அபிமானம் கொல் - (அவளிடம் கொண்ட) பெருங்காதலாலா?; தெரிந்தது இல்லை - (உரிய காரணம்) தெரியவில்லை.
திருமலர்க்கண் இமைப்பில் ஆயிரம் கற்பங்கள் போக்கும் இராமனுக்கு, சீதை பிரிவால் ஓர் இரவைக் கூடக் கழிக்க முடியவில்லை என்றவாறு. இதனால் இறைவன் காலங்கடந்தவன் என்பதை விளங்கினார் 'காலமும் கணக்கும் நீத்த காரணன்' (5884) என்றார் பிறாண்டும். அரோ - அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Was it because of the parting? Was it because of his great love?
- It is not known; he who lets a thousand aeons go by
- in the mere closing of the lids of his lovely flower eyes,
- sat on and on, yet did not see the end of the night.
What the poem says
Another paradox of the god become man. Irāmaṉ is the Lord for whom a thousand cosmic ages pass in the blink of an eye; he stands beyond time.
Yet tonight he cannot get through a single night; he sits waiting and the darkness never ends. The poet asks whether this is because of the separation or because of his great love for Cītai, and leaves the question open.