கம்பராமாயணம் 3646 · ஆரணிய 9.19

Section ஆரணிய காண்டம் / 9. அயோமுகிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''
பாட வேறுபாடு · Project Madurai reads
1'' வென்றி வேற்கை இளவலை ! மேல் எலாம்
ஒன்றுபோல உலப்பு இல நாள்கள்தாம்
நின்று காண்டி அன்றே ? நெடுங் கங்குல் தான் ,
இன்று நீள்வதற்கு ஏது என் ? '' என்னும் ஆல் .

பொருள் · Meaning in Tamil

வென்றி விற்கை இளவலை - வெற்றிக்கு உரிய வில்லைக் கையில் பிடித்த இளையவனாகிய இலக்குவனை (இராமன் பார்த்து); ஒன்று போல உலப்பு இல நாள்கள் - ஒரே மாதிரியாக இயல்பு கெடாது கழிந்த நாள்களை; மேல் எலாம் - முன்பு எல்லாம்; நின்று காண்டி அன்றே - (என்னோடு சேர்ந்து) இருந்து கண்டுள்ளாய் அல்லவா?; நெடுங் கங்குல் இன்று நீள்வதற்கு ஏது என்? - நீண்ட இரவுப் பொழுது இன்று மட்டும் நீண்டிருப்பதாய்த் தோன்றுவதற்குக் காரணம் என்ன?; என்னும் - என்று கேட்கும்.

'என்னுடன் உடனிருந்து கழித்த நாட்களில் நீ கண்டுள்ள இரவை விட இன்று மட்டும் இரவு நீள யாது காரணம்?' என்று இராமன் இலக்குவனை வினவினான் என்க. நின்று - இரவு முழுதும் விழித்து நின்று. எலாம் - இடைக்குறை, தாம், தான், ஆல் - அசைகள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Younger brother, with the bow of victory in your hand, all the days before,
  2. have you not stood watch and seen the numberless days go by, each like the other?
  3. Why is it, then, that this long night
  4. stretches on so today?' he says.

What the poem says

Irāmaṉ turns to Ilakkuvaṉ, who has kept watch, sleepless, every night of the exile. Ilakkuvaṉ has seen countless days and nights pass in the same regular way.

So Irāmaṉ asks him: why should tonight alone be so long? It is the lover's complaint that time drags when the beloved is absent.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' veṉṟi viṟ kai iḷavalai! mēl elām
oṉṟu pōla ulappu ila nāḷkaḷtām
niṉṟu kāṇṭi aṉṟē? neṭuṅ kaṅkultāṉ,
iṉṟu nīḷvataṟku ētu eṉ? '' eṉṉumāl.