கம்பராமாயணம் 3648 · ஆரணிய 9.21

Section ஆரணிய காண்டம் / 9. அயோமுகிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''

பொருள் · Meaning in Tamil

சேண் உலாம் தனித் தேரவன் - நீண்டுள்ள (வானத்தில்) உலா வருகிற ஒப்பற்ற தனித் தேரை உடைய கதிரவன்; நீள் நிலாவின் இசை நிறை - (ஒளி மிகுந்த) நிலவை ஒத்துப் புகழ் நிறைந்த; தன் குலத்து - தன் குலத்துக்கு; ஆணி ஆய பழி வர - அடிப்படையாகிய பழி வந்ததனால்; அன்னது நாணி - அப்பழிக்கு நாணம் கொண்டு; நாடு கடந்தனனாம் கொலோ - நாட்டு மக்களின் கண் காணாத இடத்துக்குச் சென்று விட்டான் போலும்; என்னும் - என்று (இராமன்) சொன்னான்.

நீண்ட நேரம் இரவு கழியாமை கண்ட இராமன், சூரிய குலத்திற்கு ஏற்பட்ட பழிக்கு நாணம் கொண்டு கதிரவன் கண் காணாத இடத்துக்குச் சென்று விட்டானோ என்றான். இப்பாடல் இரவு நீண்டு கழியாமைக்குக் காரணம் கூறுகிறது. நீள் நிலாவின் இசை - புகழுக்கு வெண்ணிறத்தை உரியதாகக் கூறுதல் மரபாதலின் அதற்கு நிலவை உவமை கூறினார் என்பர் வை. மு. கோ. இசை - புகழ். ஆணி - அச்சாணி, அடிப்படை. சீதையை இராவணன் கவர்ந்து சென்றது சூரிய குலத்துக்கு ஏற்பட்ட ஆணி ஆய பழி என்க. ஓ, ஆல் - அசைகள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Upon his clan, full of a fame as bright as the spreading moonlight,
  2. a disgrace has come that strikes at its very linchpin; ashamed of that,
  3. has he perhaps left the land and gone away,
  4. he of the single chariot who travels the far sky?' he says.

What the poem says

Still the night does not end, and Irāmaṉ looks for a reason. The sun is the founder of his own Solar dynasty, whose fame is pictured as white like moonlight, since Tamil poets give fame a white colour.

Cītai's abduction is a disgrace that strikes at the very linchpin of that line. Perhaps, Irāmaṉ thinks, the sun is so ashamed that he has gone off somewhere no one can see him, and so refuses to rise.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' nīḷ nilāviṉ icai niṟai taṉ kulattu
āṇi āya paḻi vara, aṉṉatu
nāṇi, nāṭu kaṭantaṉaṉāmkolō,
cēṇ ulām taṉit tēravaṉ? '' eṉṉumāl.