கம்பராமாயணம் 3649 · ஆரணிய 9.22
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சுட்ட கங்குல் நெடிது எனச் சோர்கின்றான் - (தன்னைச் சுட்டுவருத்திய இரவு மிக நீண்டது என்று மனந்தளர்பவனாகிய (இராமன்; வாள் அரக்கன் - வாளை ஏந்திய அரக்கனாகிய இராவணன்; முட்டு அமைந்த நெடு முடக்கோனொடு - கடிவாளத்தைக் கையில் கொண்ட பெரிய அருணனோடு; கதிரோனையும் - கதிரவனையும்; கட்டி - (தன் ஆற்றலால் கட்டி; இருஞ் சிறை இட்டனன் கொல் - பெரிய சிறையில் அடைத்திட்டானோ?, என்னும் - என்று (இராமன்) எண்ணினான்.
இரவு நீள்தற்கு உரிய காரணம் என்ன என்று மேலும் எண்ணிய இராமன் ஒரு வேளை இராவணன் கதிரவனை அவனுடைய தேர்ப் பாகன் ஆகிய அருணனுடன் ஒரு சேரக் கட்டிச் சிறையில் இட்டுவிட்டானோ என்றான். முட்டு - கடிவாளம். முடக்கோன் - அருணன்; இவன் தொடை இல்லாதவன் ஆகவே இவ்வாறு கூறப்பட்டது. சுட்ட - செய்த எனும் வாய்பாட்டுப் பெயரெச்சம். சோர்கின்றான் - வினையாலணையும் பெயர். ஆல் - அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Sinking down, saying, 'This burning night is long,'
- he asks: 'Along with the great lame one who holds the reins,
- has the sword-bearing demon bound the sun as well
- and thrown him into a deep prison?'
What the poem says
Irāmaṉ tries another explanation for the endless night. Irāvaṇaṉ is known to have imprisoned gods and to make the heavenly powers serve him.
Perhaps he has tied up the sun together with his charioteer Aruṇaṉ, the dawn, who in myth has no thighs and so is called 'the lame one', and locked them both away. That would explain why morning never comes.