கம்பராமாயணம் 3660 · ஆரணிய 9.33
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆசை சுமந்த நெடுங்கரி அன்னார் - திசைகளைத் தாங்குகிற பெரிய திசை யானைகளை ஒத்தவர்களாகிய இராமலக்குவர்; பாசிலை துன்று வனம் பல பின்னா - பசிய இலைகள் நெருங்கிய காடுகள் பல பின்னாக (நடந்து சென்று); காசு அறு குன்றினோடு - குற்றம் இல்லாத மலைகளையும்; ஆறு கடந்தார் - ஆறுகளையும் கடந்தவர்களாகி; ஒன்பதொடு ஒன்பது யோசனை சென்றார் - பதினெட்டு யோசனை (தூரம்) சென்றார்கள்.
இராமலக்குவர் நடந்து சென்று பதினெட்டு யோசனை தூரம் கடந்தனர் என்க. ஆசை - திசை. துன்றுதல் - நெருங்குதல்; காசு - குற்றம். அன்னார் - குறிப்பு வினையாலணையும் பெயர். பாசிலை - பண்புத்தொகை. கடந்தார் - முற்றெச்சம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Those two, like the great elephants that bear up the directions,
- leaving behind many forests dense with green leaves,
- crossed flawless hills and rivers;
- they travelled nine yojanas and nine more.
What the poem says
The brothers, compared to the mighty elephants that support the eight directions of the world, march on.
They pass through dense green forests, over hills and across rivers, covering eighteen yojanas, a great distance in a single day's search.