கம்பராமாயணம் 3662 · ஆரணிய 9.35

Section ஆரணிய காண்டம் / 9. அயோமுகிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வெங்கதிர் - வெப்பமான கதிர்களை உடைய கதிரவன்; ஆரியர் சிந்தை அலக்கண் அறிந்தான் - வீரர்களாகிய (அந்த) இராமலக்குவரது மனத் துன்பத்தை அறிந்து; நாரியை எங்கணும் நாடினன் நாடி - பெண்ணாகிய சீதையை எங்கும் (துருவித் தேடிப் பார்த்து; பேர் உலகு எங்கும் உழன்று - (இந்தப்) பெரிய நிலவுலகு முழுவதும் அலைந்து திரிந்து; மேருவின் மீள இருள் பின்னா மறைந்தான் - மேரு மலையில் மறுபடியும் தனக்குப் பின் இருள் தொடரும் படி சென்று மறைந்தான்.

உலகம் முழுதும் சீதையை தேடி அலுத்த கதிரவன் உலகுக்கு அப்புறம் போயும் தேடுவான் போலத் தனக்குப் பின் இருள் தொடருமாறு மேரு மலையில் மறைந்தான். ஆரியர் - வீரர் அறிவுடையவர் பெரியோர் எனினுமாம். அலக்கண் - துன்பம், நாரி - பெண்; ஈண்டுச் சீதை. அறிந்தான் - முற்றெச்சம். வெங்கதிர் - பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Knowing the grief in the hearts of the noble ones,
  2. the hot-rayed sun searched for the woman everywhere, and having searched,
  3. wandering over the whole wide world, with darkness following behind him,
  4. he hid himself once more behind Mēru.

What the poem says

Sunset is imagined as a search. The sun, knowing the brothers' grief, has spent the whole day travelling over the world looking for Cītai.

Not finding her, he goes down behind Mount Mēru, as though to keep looking beyond the edge of the world, with darkness following on his heels. The second night of the canto begins.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āriyar cintai alakkaṇ aṟintāṉ,
nāriyai eṅkaṇum nāṭiṉaṉ, nāṭi
pēr ulaku eṅkum uḻaṉṟu, iruḷ piṉṉā
mēruviṉ veṅkatir mīḷa maṟaintāṉ.