கம்பராமாயணம் 3663 · ஆரணிய 9.36
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
செறி அஞ்சன புஞ்சம் - அடர்ந்த மையின் திரட்சி; அரண்டு - அஞ்சி; அருகும் முரண்டன போல் - (இரு) பக்கங்களிலும் வளைத்துக் கொண்டன போல; எங்கணும் இருள் முந்த - எல்லாப் பக்கங்களிலும் இருள் சூழ; தெருண்ட அறிவில்லவர் - தெளிவில்லாத அறிவில்லாதவர்களுடைய; சிந்தையின் - மனத்தினைப் போல; மாதிரம் எட்டும் இரண்டும் - திசைகள் பத்தினையும்; முந்தி இருண்டன - விரைந்து இருளுமாறு செய்தன.
தெளிவில்லாத மனத்தவர் மனம் போல பத்துத் திசைகளையும் இருள் வளைத்துக் கொண்டது என்றபடி. அரண்டு அருகும் - அரண்டருகும்; அரண் தருகும் எனப் பிரித்து, காவல் தரும் எனவும் பொருள் கொள்ளலாம். புஞ்சம் - திரட்சி. மாதிரம் - திசை. திசைகள் பத்தாவன - பெருந்திசை நான்கு, கோண திசை நான்கு. மேல், கீழ்த் திசை இரண்டு ஆகப்பத்தென்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As if dense masses of collyrium, in alarm, had closed in on every side,
- darkness rushed forward everywhere;
- like the minds of those who lack clear understanding,
- the eight directions and the two grew dark at once.
What the poem says
Night falls thick and fast, like heaps of black eye-paint pressing in from all sides.
All ten directions, the four cardinal points, the four intermediate ones, and up and down, go dark at once, as dark as the mind of a person without clear understanding.