கம்பராமாயணம் 3664 · ஆரணிய 9.37
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இளிக்கு அறை இன் சொல் இயைந்தன பூவை - இளி என்னும் இசைக்கு (ஒப்பு என்று) கூறப்பட்ட இனிய சொற்களை உடையனவாகிய நாகண வாய்ப்புட்கள்; கிளிக்கு அறையும் பொழில் - (அந்த இனிமையான சொற்களைக்) கிளிகளுக்குச் சொல்லித் தரும் சோலையில்; கிஞ்சுக வேலி - முள் முருக்க மரங்களை வேலியாக உடைய; ஒளிக் கறை மண்டிலம் ஒத்துளது - ஒளியும் முயற்கறையும் உடைய (சந்திர மண்டலத்தை ஒத்துள்ளதாகிய; ஓர் பளிக்கு அறை கண்டு - ஒரு பளிங்குப் பாறையைக் கண்டு; ஆங்கு அதில் வைகல் பயின்றார் - அவ்விடத்து அப்பாறையில் தங்கினார்கள்.
சோலையைச் சேர்ந்த இராமலக்குவர் அங்குள்ள பளிங்குப் பாறையில் தங்கினார்கள். இளி - குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்ற ஏழிசைகளில் ஒன்று. பூவை - நாகண வாய்ப்புள், மைனா. கிஞ்சுகம் - முள் முருங்கை. ஒளிக் கறை - ஒளியும் கறையும் உடன் கூறினமையால் சந்திர மண்டிலம் என்க. பளிக்கறை - பளிங்கினாலாகிய அறை; அறை - பாறை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- In a grove where mynas, whose sweet speech matches the iḷi note,
- teach their words to the parrots, fenced round with kiñcuka trees,
- they found there a slab of crystal, like the bright, marked disc of the moon,
- and settled down to stay on it.
What the poem says
The brothers stop for the night in a grove ringed with flame-of-the-forest trees, where mynas, whose voices match iḷi, one of the seven notes of the Tamil musical scale, teach their sweet words to the parrots.
There they find a slab of crystal rock, gleaming and flecked like the moon with its mark of the hare, and rest upon it.