கம்பராமாயணம் 3665 · ஆரணிய 9.38
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அவ் இடை எய்திய - அந்த இடத்திற்குச் சென்று தங்கிய; அண்ணல் இராமன் - தலைவனாகிய இராமன்; வெவ் விடைபோல் இளவீரனை - வலிமையுள்ள காளை போன்ற இளைய வீரனாகிய இலக்குவனைப் (பார்த்து); வீர - வீரனே; இவ் இடை நீர் நாடினை கொணர்க - இவ்விடத்தில் தண்ணீரைத் தேடிக் கொண்டு வருவாய்; என்றான் - என்று கூறினான்; தெவ் இடை வில்லவனும் தனி சென்றான் - (அது கேட்ட) பகைவர் பின்னிடக் காரணமாகிய வில்லை உடைய இலக்குவனும் தனியே (இராமனைப் பிரிந்து) போனான்.
சீதையைப் பிரிந்து இராமன் மாயமானின் பின் சென்றது போல இராமனுக்கு நீர் கொண்டுவர அவனைப் பிரிந்து இலக்குவன் தனியே சென்றான் என்க. இடை - இடம். விடை, வலிமை நடை, செருக்கு ஆகியவற்றால் இலக்குவனுக்கு உவமை. தெவ் - பகை. நாடினை - முற்றெச்சம், கொணர்க - வியங்கோள் வினைமுற்று. தெவ் - பண்பாகு பெயர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Noble Irāmaṉ, having reached that place,
- said to the young hero, who was like a fierce bull, 'Hero,
- search around here for water and bring some';
- and he whose bow makes enemies give ground went off alone.
What the poem says
Irāmaṉ, thirsty, asks Ilakkuvaṉ, strong and proud as a bull, to find water nearby and bring it back.
Ilakkuvaṉ goes off alone. The moment echoes the earlier separation: just as Irāmaṉ left Cītai to chase the golden deer, now Ilakkuvaṉ leaves Irāmaṉ, and once again danger lies in wait.