கம்பராமாயணம் 3666 · ஆரணிய 9.39
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நீர் எங்கணும் நாடினன் இடை காணான் - தண்ணீரை எல்லாவிடத்திலும் தேடி அவ்விடத்தில் காணாதவனாகி, சிங்கம் எனத் தமியன் திரிவானை - சிங்கம் போலத் தனியாகத் திரிகின்றவனாகிய இலக்குவனை; அங்கு அவ்வனத்துள் - அப்பொழுது அந்தக் காட்டில் (உள்ள); அயோமுகி என்னும் - அயோமுகி என்ற பெயர் கொண்ட; வெங்கண் அரக்கி - கொடிய கண்களை உடைய அரக்கியாகியவள்; விரும்பினள் கண்டாள் - ஆசை கொண்டு பார்த்தாள்.
காட்டில் தனியே நீர் தேடிச் சென்ற இலக்குவனை அயோமுகி ஆசை கொண்டு பார்த்தாள். அயோமுகி - இரும்பு போன்ற முகம் உடையவள். காணான், விரும்பினள் - முற்றெச்சங்கள். திரிவானை - வினையாலணையும் பெயர். வெங்கண் - பண்புத் தொகை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He searched everywhere but found no water there;
- and as he wandered on alone like a lion,
- there in that forest a fierce-eyed demoness
- named Ayōmuki saw him and was filled with desire.
What the poem says
Ilakkuvaṉ searches the forest for water and finds none. As he roams alone, proud as a lion, he is spotted by Ayōmuki, a demoness whose name means 'iron-faced'.
She falls in love with him at first sight. Her story mirrors Cūrppaṇakai's: another demoness drawn to one of the brothers, which leads to violence.