கம்பராமாயணம் 3681 · ஆரணிய 9.54

Section ஆரணிய காண்டம் / 9. அயோமுகிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
''
''
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆறிய சிந்தையள் அ•து உரை செய்யச்
சீறிய கோளரி , கண்கள் சிவந்தான் ,
'' மாறு இல் இ வார்கணை , இவ் உரை வாயில்
கூறிடின் , நின் உடல் கூறு இடும் '' என்றான் .

பொருள் · Meaning in Tamil

ஆறிய சிந்தையள் - (இலக்குவன் மீது கொண்ட காதலால்) கொடுமை குறைந்த மனம் உடையவளாகிய (அயோமுகி); அஃது உரை செய்ய - அந்தச் சொற்களைச் சொல்ல; சீறிய கோளரி - சினம் கொண்ட சிங்கம் போன்ற இலக்குவன்; கண்கள் சிவந்தான் - சினத்தால் கண்கள் சிவந்து; 'இவ்வுரை வாயின் கூறிடின் - இப்படிப்பட்ட சொற்களை (நீ மீண்டும்) வாயினால் கூறினால்; மாறு இலவார் கணை - (எனது) ஒப்பு இல்லாத நீண்ட அம்புகள்; நின் உடல் கூறிடும் - உனது உடலைத் துண்டு துண்டாக்கி விடும்; என்றான் - என்று கூறினான்.

நீ மீண்டும் இவ்வாறு கூறினால் என் அம்பு உன் உடலைக் கூறிடும் என்றவாறு. கோளரி - உவமையாகு பெயர். கோளரி சிவந்தான் - திணை வழுவமைதி. பாடலின் இறுதி வரியில் உள்ள சொல் நயம் காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When she, her cruelty calmed by love, said this,
  2. he, a raging lion, turned red-eyed with anger:
  3. 'My long arrows that have no equal, if these words from your mouth
  4. you speak again, will cut your body to pieces,' he said.

What the poem says

Ilakkuvaṉ's response is a furious threat. If she says such things again, his matchless arrows will cut her body apart.

The last line plays on the same word: kūṟiṭiṉ, 'if you speak', and kūṟiṭum, 'will cut into parts'. Speak it again and she will be cut up.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṟiya cintaiyaḷ aḵtu uraiceyya
cīṟiya kōḷari, kaṇkaḷ civantāṉ,
'' māṟu ila vār kaṇai, iv urai vāyiṉ
kūṟiṭiṉ, niṉ uṭal kūṟiṭum '' eṉṟāṉ.