கம்பராமாயணம் 3683 · ஆரணிய 9.56
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வெங்கதம் இல்லவள் - கொடிய சினம் இல்லாதவளாகிய (அயோமுகி); பின்னரும் - பின்பும்; 'மேலோய் - உயர்ந்தவனே!; இங்கு நறும் புனல் நாடுதி என்னின் - இவ்விடத்தில் நல்ல நீரைத் தேடுகிறாய் என்றால்; எனை - எனக்கு; அங்கையினால் - உன்னுடைய அழகான கைகளினால்; "அஞ்சலை" என்றால் - அஞ்சாதே என்று அபயம் அளித்தால்; கடிது - விரைவாக, கங்கையின் நீர் கொணர்வென் - (உனக்காகக்) கங்கையின் நீரைக் கூடக் கொண்டு வந்து கொடுப்பேன்; என்றாள் - என்று கூறினாள்.
அரக்கியாதலின் சினம் கொள்ளல் இயற்கையெனினும், இலக்குவன்பால் கொண்ட காமத்தால் கதம் (சினம்) காட்டாதவளாயினாள். கதம் - சினம், அங்கை - அங்கை என்க. கடிது - விரைவு. வெங்கதம், நறும்புனல் - பண்புத் தொகைகள், கொணர்வென் - தன்மை ஒருமை வினைமுற்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- She, who showed no fierce anger, spoke again: 'Noble one,
- if you are searching here for fresh, sweet water,
- then if with your lovely hand you tell me, "Do not be afraid,"
- I will bring you even the water of the Gaṅgai, and quickly,' she said.
What the poem says
Though anger is a demoness's nature, love keeps Ayōmuki gentle. She has guessed why Ilakkuvaṉ is wandering: he is looking for water.
She offers a bargain. If he will only raise his hand in the gesture that grants protection and say 'Do not fear', she will fetch him water from the holy Gaṅgā itself, at once.