கம்பராமாயணம் 3684 · ஆரணிய 9.57

Section ஆரணிய காண்டம் / 9. அயோமுகிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
''

பொருள் · Meaning in Tamil

சுமித்திரை சேய் - சுமித்திரை மகனாகிய இலக்குவன்; அவள் சொன்ன அன்ன சொல் - அந்த அயோமுகி கூறிய அத்தன்மையாகிய சொற்களை; கமித்திலன் - பொறுக்காதவனாக; 'நின் இரு காதொடும் நாசி துமிப்பதன் முன்பு - ('அயோமுகியை நோக்கி நான் உனது இரு காதுகளோடு மூக்கையும் அறுப்பதற்கு முன்பு; அகல் - (இவ்விடத்தை விட்டுப்) போய்விடு'; என்பது சொல்ல - என்று சொல்ல; இமைத்திலள் நின்றனள் - (அது கேட்டுக்) கண்ணிமைக்காமல் நின்றவளாகிய அவள்; இன்ன நினைந்தாள் - இவ்வாறு நினைப்பவள் ஆனாள். நினைத்ததை அடுத்த பாடலில் காண்க.

அயோமுகியின் சொல் கேட்ட இலக்குவன் சினந்து, நான் உன் இரு காதுகளையும் மூக்கையும் அறுப்பதற்கு முன்பு போய் விடு என்று கூற, அயோமுகி திகைத்துக் கண்ணிமைக்காமல் நின்று சிலவற்றை எண்ணினன் என்க. கமித்திலன் - பொறுத்திலன். துமித்தல் - துண்டித்தல், இமைத்திலள் - முற்றெச்சம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The son of Cumittirai could not bear the words she had spoken;
  2. 'Before I cut off your nose together with your two ears,
  3. get away from here!' he said;
  4. and she stood there without blinking, and thought as follows.

What the poem says

Ilakkuvaṉ, son of Cumittirai, loses patience. He warns Ayōmuki to leave before he cuts off her nose and ears, the very punishment he gave Cūrppaṇakai.

Ayōmuki stands stock-still, staring, and makes a plan, which the next verse reveals.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cumittirai cēy, avaḷ coṉṉa col aṉṉa
kamittilaṉ,'' niṉ iru kātoṭum nāci
tumippataṉ muṉpu akal '' eṉpatu colla,
imaittilaḷ niṉṟaṉaḷ, iṉṉa niṉaintāḷ.