கம்பராமாயணம் 3686 · ஆரணிய 9.59
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வெய்யாள் - கொடியவளாகிய அயோமுகி; மோகனை என்பது - மோகத்தை உண்டாக்கும் மாயையை, முந்தி முயன்றாள் - முன்னால் முயன்று செய்து; மாக நெடுங்கிரி போலியை வவ்வா - விண்ணை அளாவிய பெரிய மலை போன்றவனாகிய இலக்குவனைத் தூக்கிக் கொண்டு; உம்பரின் - மேலே உள்ள வானத்தில்; இந்துவொடு ஏகும் மேகம் எனும்படி - நிலவுடன் சேர்ந்து செல்லுகிற மேகம் என்று சொல்லும் படியாக; நொய்தினின் - (மிக) விரைவாக; ஏகினள் - சென்றாள்.
அயோமுகி மோகனை என்ற மாய மந்திரத்தால் இலக்குவனை மயக்கி, அவனை எடுத்துக் கொண்டு, நிலவுடன் சேர்ந்து செல்லுகிற மேகம் போல வானத்தில் விரைந்து சென்றாள். மோகனை - மோகத்தை உண்டாக்கும் மாயை. மாகம் - வானம். இந்து - நிலவு. நொய்தினின் - எளிமையாக எனினுமாம். "நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன்" (5) எனக் கம்பர் கூறியுள்ளதை எண்ணுக. இந்து - இலக்குவனுக்கும், மேகம் - அயோமுகிக்கும் உவமையாம். ஒளி அறத்துக்கும், கருமை பாவத்துக்கும் இங்கு வந்துள்ளமை காண்க. வவ்வா - செய்யா எனும் வாய்பாட்டு உடன் பாட்டு வினையெச்சம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- First she worked the spell called Mōkaṉai, that brings on a swoon;
- then, seizing him who was like a tall mountain reaching the sky,
- she rose into the heavens, like a cloud that sails along
- with the moon, easily and swiftly, that cruel one.
What the poem says
Ayōmuki casts a spell called Mōkaṉai, the bewilderer, which leaves Ilakkuvaṉ stunned. Then she picks him up and flies off through the sky.
The sight is like a dark cloud drifting along with the moon: the shining moon is Ilakkuvaṉ, the black cloud is the demoness. Bright and dark stand here, as so often, for righteousness and sin.