கம்பராமாயணம் 3687 · ஆரணிய 9.60

Section ஆரணிய காண்டம் / 9. அயோமுகிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மந்தரம் வேலையில் வந்ததும் , வானத்து
இந்திரன் ஊர்முகில் என்னலும் ஆனாள் ;
வெந் திறல் வேல் கொடு சூர் அடும் வீரச்
சுந்தரன் ஊர்தரு தோகையும் ஒத்தாள் .

பொருள் · Meaning in Tamil

மந்தரம் வேலையில் வந்ததும் - (இலக்குவனைத் தூக்கிச் சென்ற அயோமுகி) மந்தரமலை கடலில் பொருந்தியது போலவும்; வானத்து இந்திரன் ஊர்பிடி - தேவர் உலகத்தில் இந்திரன் ஏறிச் செலுத்தும் (ஐராவதம் என்ற ஆண் யானையின் துணையாகிய) அப்பிரமு என்ற பெண் யானை; என்னலும் ஆனாள் - என்று உவமை கூறத்தக்கவளாய் விளங்கினாள்; வெந்திறல் வேல் கொடு சூர் அடும் - (அதற்கு மேல் தன் வலிமை பொருந்திய வேலைக் கொண்டு சூரபதுமனைக் கொன்ற; வீரச் சுந்தரன் ஊர்தரு தோகையும் - வீர அழகனாகிய முருகக் கடவுள் ஏறிச் செலுத்துகிற மயிலையும்; ஒத்தாள் - ஒத்து விளங்கினாள்.

இலக்குவனை அயோமுகி தூக்கிச் சென்ற காட்சியை இப்பாடலில் மூன்று உவமைகள் கொண்டு விளக்கினார். (1) மந்தரமலை - இலக்குவன், கடல் - மந்தர மலையைத் தாங்கிய கடல் அயோமுகி. இஃது இல் பொருள் உவமை. (2) இந்திரன்; இலக்குவன், அவன் ஊர்பிடி - அப்பிரமு: அயோமுகி. அயோமுகி பெண் என்பதால் இந்திரன் ஊரும் ஐராவதம் என்ற ஆண் யானையைக் கூறாது அதன் துணையாகிய பெண் யானையைக் கூறினார். (3) முருகன் : இலக்குவன். முருகனைத் தாங்கும் தோகை; அயோமுகி. இங்குப் பெண் மயில் கூறாது தோகையுடைய ஆண் மயிலைக் கூறியது, முருகனைச் சுமக்கும் மயிலைக் கருதியதால் என்க. இம்மூன்று உவமைக்கும், "தாங்குதல்" என்பது பொதுத் தன்மையாதலையும் அறிக. வேலை - கடல், சூர் - சூரபதுமன், சுந்தரன் - முருகன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. She was like the ocean when Mantaram came down into it, and might be called
  2. the she-elephant that Intiraṉ rides in the sky;
  3. she was like the peacock ridden by the handsome hero
  4. who slew Cūr with his spear of fierce strength.

What the poem says

Three comparisons, all built on the idea of bearing a great weight. Ayōmuki carrying Ilakkuvaṉ is like the ocean bearing Mount Mantara when the gods churned it; like the female mate of Airāvata, the elephant that carries Intiraṉ; and like the peacock that carries Murukaṉ, the beautiful young god who killed the demon Cūrapatumaṉ with his spear.

In each image Ilakkuvaṉ is the divine burden and the demoness is merely the bearer.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mantaram vēlaiyil vantatum, vāṉattu
intiraṉ ūr piṭi eṉṉalum āṉāḷ;
ven tiṟal vēl koṭu cūr aṭum vīrac
cuntaraṉ ūrtaru tōkaiyum ottāḷ.