கம்பராமாயணம் 3688 · ஆரணிய 9.61

Section ஆரணிய காண்டம் / 9. அயோமுகிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆங்கு - அந்த நிலையில்; அவள் மார்பொடு கையின் அடங்கி - அவளது மார்பின் கண்ணும் கையின் கண்ணும் அடங்க; பூங்கழல் வார் சிலை மீளி - அழகிய வீரக்கழலை அணிந்த நீண்ட வில்லை ஏந்திய வீரனாகிய (இலக்குவன்); பொலிந்தான் - அழகு பெற விளங்கினான்; வீங்கிய வெஞ்சின - மிகக் கொடிய சினத்தினையும்; வீழ் மத - வடிகின்ற மதத்தினையும்; வெம்போர் - கொடிய போரினையும் செய்கிற, ஓங்கல் - யானையினது; உரிக்குள் - உரித்த தோலுக்குள் இருந்து காட்சியளிக்கும்; உருத்திரன் ஒத்தான் - சிவ பிரானை ஒத்து விளங்கினான்.

அயோமுகி தன் மார்போடு அணைத்துக் கைகளால் தழுவித் தூக்கிச் சென்ற இலக்குவன் உடம்பு முழுதும் மூடும் படி யானைத்தோலைப் போர்த்த சிவபிரான் போல் விளங்கினான். மீளி - ஆண்பால் சிறப்புப்பெயர். ஓங்கல் - மலை; ஈண்டு யானை; இருமடியாகு பெயர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Held there against her breast and in her arms,
  2. the hero with fine anklets and a long bow shone out;
  3. he looked like Uruttiraṉ within the hide
  4. of the elephant swollen with rage, dripping must, fierce in battle.

What the poem says

Wrapped in Ayōmuki's huge dark arms and pressed to her breast, Ilakkuvaṉ still shines.

He looks like Civaṉ in his form as Uruttiraṉ, clothed in the hide of the raging elephant demon he flayed: the dark mass of the demoness is the elephant skin, and the radiant hero inside it is the god.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṅku avaḷ mārpoṭu kaiyiṉ aṭaṅkip
pūṅkaḻal vār cilai mīḷi polintāṉ;
vīṅkiya veñciṉa vīḻ mata vem pōr
ōṅkal urikkuḷ uruttiraṉ ottāṉ.