கம்பராமாயணம் 3689 · ஆரணிய 9.62
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அன்னவள் - அத்தன்மையளாகிய அயோமுகி; இப்படி ஏகினள் - (மேற்குறிப்பிட்ட) இவ்வாறு (இலக்குவனைத் தழுவித் தூக்கிக் கொண்டு) சென்றாள்; இப்பால் - (இராமன் இருந்த) இவ்விடத்தில்; வெப்புடை மெய்யொடு வீரன் - (மனைவியையும் தம்பியையும் பிரிந்த) தாபம் கொண்ட உடலோடு கூடிய வீரனாகிய இராமன்; இடை அப்பு தேடி நடந்த - காட்டின் இடையில் தண்ணீரைத் தேடிக் கொண்டு நடந்து சென்ற; என் ஆவி - எனது உயிர் போன்ற; துப்புடை மால்வரை - வலிமை உடைய பெரிய மலை போன்றவனாகிய இலக்குவன்; தோன்றலன் என்னா - இன்னும் வரக்காணோமே என்று எண்ணி; விரைந்தான் - (அவனைத் தேடுவதற்காக) விரைந்து சென்றான்.
அப்பு - நீர். துப்பு - வலிமை. வெப்பு - விரக வேதனையும் நீர் வேட்கை வேதனையும் பாச வேதனையும் உண்டாக்கிய வெப்பம். அன்னவள் - குறிப்பு வினையாலணையும் பெயர். மால்வரை - உரிச்சொல் தொடர். வரை - உவமையாகு பெயர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- So she went off; and on this side,
- saying, 'He who went seeking water in this wild place, my very life,
- that strong, great mountain of a man, has not appeared,'
- the hero, his body burning, hurried off.
What the poem says
The scene switches back to Irāmaṉ, waiting at the crystal rock. Ilakkuvaṉ, 'my life', strong as a mountain, has gone for water and not returned.
Irāmaṉ's body burns with a threefold heat: longing for Cītai, thirst, and anxious love for his brother. He sets off quickly to look for him.