கம்பராமாயணம் 3690 · ஆரணிய 9.63
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நொய்தாய் வர - (இலக்குவன்) விரைவாய் வருவதற்கு; வேகமும் நொய்திலனால் - விரைவும் குறைவாக உடையவனல்லன்; எய்தாது ஒழியான் - வராமல் இருக்கவும் மாட்டான்; வெய்து ஆகிய கானிடை மேவரும் நீர் ஐது ஆதலினோ? - (அப்படி இருந்தும் அவன் வாராமைக்குக் காரணம்) வெப்பம் உடைய காட்டில் பொருந்தி உள்ள தண்ணீர் கிடைக்க அருமையானதா? (அல்லது); அயல் ஒன்று உளதோ - வேறு ஏதாவது ஒன்று நேர்ந்து விட்டதோ?; இது என்னை கொலாம் - இவ்வாறு ஆனதற்கு என்ன காரணமோ?
எண்ணிய கருமம் முடித்து வேகமாக வந்து சேரும் இயல்புள்ள இலக்குவன் காட்டில் நீர் கிடைக்காமையாலே, வேறு ஏதோ ஏற்பட்டோ இன்னும் வந்து சேரவில்லை போலும் என இராமன் எண்ணினான். வெய்து - வெப்பம். மேவுதல் - பொருந்தல், ஐது - அரிது. உண்மை எனினுமாம். ஈண்டு இன்மை குறித்தது. நொய்தாய் - விரைவாய், ஆல், ஆம் - அசைகள், கொல் - ஐயப்பொருள் தருவதோர் இடைச்சொல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Is it because the water to be found in this hot forest
- is scarce? Or has something else happened?
- He is never slow to come back quickly;
- he would not fail to return; what can this be?'
What the poem says
Irāmaṉ thinks aloud. Ilakkuvaṉ always does what he sets out to do and returns promptly; he would never simply fail to come back.
Either water is impossible to find in this scorching forest, or something else has happened to him. What can it be?