கம்பராமாயணம் 3691 · ஆரணிய 9.64

Section ஆரணிய காண்டம் / 9. அயோமுகிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
'
''

பொருள் · Meaning in Tamil

இவ்வழி நேடினை போய் - இந்த வழியில் தேடிப்போய்; நீர் கண்டனை கொண்டு சார் - தண்ணீரைக் கொண்டு வருக; என - என்று நான் கூற; இத்துணை சார்கிலனால் - (அதனை ஏற்றுச் சென்ற இலக்குவன் இவ்வளவு நேரம் கடந்தும் வந்து சேரவில்லை; வார்கொண்டு அணி கொங்கையை - கச்சினைக் கொண்டு (அழகு பெற) அணிந்துள்ள முலைகளை உடைய சீதையை; வவ்வினர் பால் - கவர்ந்து சென்ற அரக்கர்களுடன்; போர்கொண்டனனோ - போர் செய்யத் தொடங்கி விட்டானோ; பொருள் உண்டு இது எனா - இந்த தாமதத்திற்கு ஏதோ அர்த்தம் உண்டு என்று....

நான் நீரைத் தேடிக் கொணர்க என்று சொன்னதை ஏற்றுச் சென்ற இலக்குவன் இன்னும் வரவில்லை. ஒருகால் சீதையைக் கவர்ந்து சென்ற அரக்கர்களைக் கண்டு அவர்களுடன் போரிட நேர்ந்து விட்டதோ என இராமன் எண்ணினான். இப்படி ஏதேனும் காரணமின்றி இலக்குவன் தாமதியான் என்பது இராமன் நினைப்பு. நேடி - தேடி. வார் - கச்சு. பொருள் - பயன். கண்டனை, நேடினை - முற்றெச்சங்கள், ஆல் - அசை. இப்பாடல் முதல் 36/4 முடிய ஒரு தொடர் 36/5 ஆம் பாடலின் 'என்னா உரையா' என்ற எச்சத் தொடர் கொண்டு இப்பாடல் முடியும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'When I told him, "Go and search along this way, find water
  2. and bring it," he went, yet all this while he has not returned;
  3. has he started a fight with those who carried off
  4. her whose breasts are bound in a bodice? There must be some reason for this,' he thought.

What the poem says

Irāmaṉ's worries multiply. He sent Ilakkuvaṉ only to fetch water, yet he has been gone a long time.

Perhaps he has stumbled on the demons who carried off Cītai and is fighting them. Ilakkuvaṉ would never be late without good cause. This verse begins a run of anxious thoughts that continues over the next few verses.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' 'nīrkaṇṭaṉai iv vaḻi nēṭiṉai pōy
cār, koṇṭu ' eṉa, ittuṇai cārkilaṉāl;
vār koṇṭu aṇi koṅkaiyai vavviṉarpāl
pōr koṇṭaṉaṉō? poruḷ uṇṭu itu '' eṉā.