கம்பராமாயணம் 3693 · ஆரணிய 9.66
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வரிவிற்கை என் ஆர் உயிர் வந்திலனால் - கட்டமைந்த வில்லைக் கையில் ஏந்திய என் அருமையான உயிர் போன்ற தம்பி வரவில்லை; தருசொல் கருதேன் - (தான் எனக்குச்) சொன்ன சொற்களை எண்ணிக் கருதாமல்; யான் ஒரு தையலை - நான் ஒப்பற்ற பெண்ணாகிய சீதையை; பிரிவுற்றனென் - பிரியப் பெற்றேன்; என்பது ஓர் பீழை - என்ற ஒப்பற்ற பெருந்துன்பம்; பெருத்து எரிவித்திட - மிகுந்து தன்னை வாட்டி வருத்தியதால்; ஆவி இழந்தனனோ - உயிரை விட்டு விட்டானோ.
மாயமான் பின் சென்ற போது தான் தடுத்ததைக் கேளாமல் பின்சென்று சீதையைப் பிரிய வேண்டிய நிலைமை வந்ததை எண்ணிக் கலங்கி உயிரை விட்டு விட்டானோ என இராமன் எண்ணினான். தருசொல் - இலக்குவன் இராமனுக்கு கூறிய சொல், "அடுத்தவும் எண்ணிச் செய்தல், அண்ணலே வன் கூறிய சொல். இதன் விரிவு இங்குப் பேசப்படுகிறது. (3398). பீழை - துன்பம். உயிர் - உவமையாகுபெயர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'He with the banded bow in his hand, my precious life, has not come;
- I, who did not heed the words he gave me, from that peerless woman
- was parted; has that one great grief swelled
- and burned in him until he lost his life?'
What the poem says
Irāmaṉ blames himself. When the golden deer appeared, Ilakkuvaṉ warned him to think before acting, and Irāmaṉ ignored that advice and chased it, which is how Cītai was lost.
Now he wonders whether Ilakkuvaṉ, brooding on that loss, has been consumed by grief and has died of it.