கம்பராமாயணம் 3695 · ஆரணிய 9.68

Section ஆரணிய காண்டம் / 9. அயோமுகிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''

பொருள் · Meaning in Tamil

தள்ளா வினையேன் - நீக்க முடியாத வினையை உடையவனாகிய எனது; தனி ஆர் உயிர் ஆய் உள்ளாய் - ஒப்பில்லாத அருமையான உயிராக உள்ளவனாகிய; ஒரு நீயும் - ஒப்பற்றவனாகிய நீயும்; ஒளித்தனையோ - (என்னை விட்டுப் பிரிந்து) மறைந்து விட்டாயோ?; பிள்ளாய் - என் பிள்ளை போல் இளையவனே; பெரியாய் - அறிவில் பெரியவனே, பிழை செய்தனை - (என்னைக் காரிருளில் கானகத்தே விட்டுச் சென்று) தவறு செய்து விட்டாய்; இதோ கொடிதே - இச்செயல் மிகக் கொடுமையானதேயாகும்; உன்னை உலகு கொள்ளாது - உனது செயலை உலகத்தில் உள்ள பெரியவர்கள் ஏற்க மாட்டார்கள். ஆல் - அசை.

வினைப்படுபவனாகிய எனது ஒப்பற்ற தம்பியாகிய நீயும் என்னைப் பிரிந்து விட்டாய். உனது இச்செயலைப் பெரியவர்கள் ஏற்கமாட்டார்கள் என்று இராமன் நொந்து கூறினான். வினையேன் - குறிப்பு வினையாலணையும் பெயர். நீயும் - எம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை; முன்பே பிரிந்து விட்ட சீதையையும் நினைவுபடுத்துவது இவ்வும்மை. உலகு - இடவாகுபெயர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'You who were the one dear life of me, a man of inescapable karma,
  2. have you too, you alone, gone and hidden yourself?
  3. My child! Great one! You have done wrong;
  4. the world will not accept this of you; this is cruel indeed!'

What the poem says

Irāmaṉ now speaks directly to the absent Ilakkuvaṉ, calling him both 'child', for he is the younger one he has cared for, and 'great one', for his wisdom.

'You too' recalls that Cītai has already been lost. Leaving his brother alone in the dark forest is a fault, Irāmaṉ says, that good people would never approve. The reproach is really a cry of love.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' taḷḷā viṉaiyēṉ taṉi ār uyir āy
uḷḷāy! oru nīyum oḷittaṉaiyō?
piḷḷāy! periyāy! piḻai ceytaṉaiyāl;
koḷḷātu ulaku uṉṉai; itō koṭitē! ''