கம்பராமாயணம் 3696 · ஆரணிய 9.69
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வந்தன பேரா இடர் - வந்தனவாகிய நீக்க முடியாத துன்பங்களை; பேர்க்க வலாய் - நீக்க வல்லவனே; தீரா இடர் தந்தனை - (என்னை விட்டுப் பிரிந்து எனக்கு) நீக்க முடியாத துன்பத்தைத் தந்து விட்டாய்; தெவ்வர் தொழும் வீரா - பகைவரும் தொழுகின்ற (வலி படைத்து) வீரனே!; எனை இங்ஙன் வெறுத்தனையோ - என்னை இவ்வாறு வெறுத்து விட்டாயோ?; வாராய் - (இங்கு) வராமல்; புறம் - (என்னைத் தனியே விட்டு) வெளியில்; இத்துணை வைகுதியோ - இவ்வளவு காலம் தங்கி இருந்தாயோ?
'எனக்கு ஏற்படும் பெருந் துன்பத்தைப் போக்க வல்லவனாகிய நீ காட்டில் என்னைத் தனியே விட்டுப் பிரிந்து சென்று எனக்கு நீங்காத துன்பத்தை உண்டாக்கிவிட்டாய்; இவ்வளவு நேரம் வராமல் தங்கியிருப்பது உனக்குச் சரியோ' என்றவாறு. தெவ்வர் - பகைவர். புறம் - வெளியில். பேரா, தீரா - ஈறுகெட்ட எதிர் மறைப்பெயரெச்சங்கள். வந்தன - முற்றெச்சம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'You who could drive away the troubles that would not otherwise leave,
- you have given me a trouble that will not end; hero whom even enemies bow to,
- have you come to hate me in this way?
- Not coming back, will you stay away out there so long?'
What the poem says
Irāmaṉ continues his lament. Ilakkuvaṉ has always been the one who removed his troubles, yet now his absence is itself a grief that will not go.
Has the hero whom even enemies revere come to dislike his brother? Why else would he stay away so long?