கம்பராமாயணம் 3697 · ஆரணிய 9.70

Section ஆரணிய காண்டம் / 9. அயோமுகிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''

பொருள் · Meaning in Tamil

என்னைத் தரும் எந்தையை - என்னைப் பெற்றெடுத்த தந்தையாகிய (தசரதனையும்); என்னையரை - என் தாய்மார்களையும்; பொன்னைப் பொருகின்ற பொலங் குழையாள் தன்னை - திருமகளை ஒத்த பொன்னால் ஆகிய காதணி அணிந்த சீதையையும்; பிரிவேன் - பிரிந்து; உளென் ஆவது தான் - (நான்) உயிருடன் இருப்பது; உன்னைப் பிரியாத உயிர்ப்பு அலவோ - உன்னை (மட்டும்) பிரியாத மூச்சுக் காற்றினால் அல்லவா?

தந்தை, தாயர், சீதை ஆகியோரை நான் பிரிந்த துன்பம் நீ உடன் இருந்தமையால் நீங்கியது என்று இலக்குவனிடம் தான் கொண்டிருந்த மிகுதியான அன்பை இராமன் வெளிப்படுத்திக் கூறினான். உயிர் என்று (3606) ஆம் பாடலிலும் கண் என்று (3607) ஆம் பாடலிலும், மீண்டும் தனி ஆர் உயிர் என்று (3608) ஆம் பாடலிலும் குறிப்பிட்ட இராமன் இங்கு 'உயிர் மூச்சு' என்று இலக்குவனைக் குறிப்பிட்டான்; இத்தொடர்ச்சியின் நயம் கண்டுணர்க. பொன் - திருமகள். குழை - காதணி. எந்தை, என்னை - மரூஉ மொழிகள். பொலங்குழை - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை. பிரிவேன் - இறந்த காலம் எதிர்காலமாக வந்த கால வழுவமைதி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'My father who begot me, my mothers,
  2. and her of the golden earrings, who rivals Tiru herself:
  3. parted from them all, the only reason I am still alive,
  4. is it not the breath I draw from never being parted from you?'

What the poem says

Irāmaṉ explains what Ilakkuvaṉ means to him. He has been separated from his father Tacarataṉ, from his mothers, and from Cītai, who is as lovely as the goddess Tiru.

What has kept him alive through all that is Ilakkuvaṉ's constant presence, his very breath. Over successive verses he has called his brother his life, his eye, his precious life, and now his breath.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' eṉṉait tarum entaiyai eṉṉaiyarai
poṉṉaip porukiṉṟa polaṅ kuḻaiyāḷ
taṉṉaip pirivēṉ, uḷeṉ āvatutāṉ,
uṉṉaip piriyāta uyirppu alavō? ''