கம்பராமாயணம் 3698 · ஆரணிய 9.71
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என்தேடினை வந்த இளங்களிறே - (மாயமானின் பின்னால் சென்ற) என்னைத் தேடினையாகிய வந்த இளைய ஆண் யானையைப் போன்றவனே; பொன் தோடு இவர்கின்ற பொலங் குழையாள் தன் - பொன்னால் ஆகிய தோடு என்னும் காதணி அணிந்தவளாகிய சீதையை; தேடி வருந்து - தேடி வருந்தித், தவம் புரிவேன் - (தனித்துத் தவம் புரிபவனாகிய என்னை; நின் தேடி வருந்த நிரப்பினையோ - உன்னைத் தேடி வருந்தும் படி செய்துவிட்டாயோ?
மாயமான் பின் சென்ற என்னைத் தேடி வந்த நீ, சீதையைத் தேடித் தவம் புரிபவனாகிய என்னை, உன்னைத் தேடி வரும்படி செய்து விட்டாயே என்றவாறு. தோடு - மகளிர் காதணி. நிரப்புதல் - செய்தல். தன் - சாரியை. நின்தேடி - இரண்டாம் வேற்றுமைத்தொகை. இளங்களிறு - அடையடுத்த உவமையாகு பெயர். ஓகாரம் வினா.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'I, who toil and suffer searching for her with the golden ear-studs on her bright earrings,
- doing my lonely penance,
- have you now made me suffer searching for you as well,
- young tusker, you who once came searching for me?'
What the poem says
When Irāmaṉ chased the golden deer, Ilakkuvaṉ came looking for him. Now the roles are reversed.
Irāmaṉ, already worn out by searching for Cītai, must also go looking for his brother, whom he calls a young bull elephant. The repeated word 'search' makes the reversal sharp.