கம்பராமாயணம் 3699 · ஆரணிய 9.72

Section ஆரணிய காண்டம் / 9. அயோமுகிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''
பாட வேறுபாடு · Project Madurai reads
1'' இன்றே இறவாது ஒழியேன் ; எமரோ ,
பொன்றாது ஒழியார் , புகல்வார் உளரேல் ;
ஒன்றாகிய உன் கிளையோரை எலாம்
கொன்றாய் ; கொடியாய் ! இதுவும் குணமோ ? ''

பொருள் · Meaning in Tamil

இன்றே இறவாது ஒழியேன் - இன்றைக்கே நான் இறக்காமல் இருக்க மாட்டேன்; புகல்வார் உளரால் - (அதை அயோத்தியில் உள்ளவர்களுக்குச் சொல்லுபவர்களும் இருக்கிறார்கள்; (ஆதலால்); எமரோ பொன்றாது ஒழியார் - (அதைக் கேட்ட) எம் உறவினர்கள் இறக்காமல் இருக்க மாட்டார்கள்; ஒன்றாகிய உன் கிளையோரை எலாம் கொன்றாய் - (இவ்வாறு செய்ததால்) ஒற்றுமை உடைய உன் உறவினர்கள் எல்லோரையும் நீ கொன்றவனானாய்; கொடியாய் - (இத்தகைய) கொடுமை உடையவனே; இதுவும் குணமோ - இதுவும் உனக்குத் தகுதியோ?

'நீ வராவிட்டால் நான் இறப்பேன். அது தெரிந்தால் நம் உறவினர் எல்லோரும் இறப்பர். இவ்வாறு அனைவரும் இறக்கத் தக்க செயல் செய்த கொடியவனே இது உனக்குத் தகுதியோ' என்று இராமன் கூறினான். எமர் - எம் உறவினர். பொன்றாது - அழியாது. ஆல் - அசை. கொன்றாய் - காலவழுவமைதி. எலாம் - இடைக்குறை. எமரோ - ஓகாரம் தெரிநிலை. குணமோ - ஓகாரம் எதிர்மறை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'This very day I shall surely die; and my people
  2. will not fail to die too, for there will be those to tell them;
  3. so you have killed all your kin, who are bound together as one;
  4. cruel one, is this how you behave?'

What the poem says

Irāmaṉ follows the chain of consequences. Without Ilakkuvaṉ he will die today; when the news reaches Ayōttī, their whole family, so closely bound, will die of grief.

So, he says, by staying away Ilakkuvaṉ has in effect killed all his kin. The accusation is unfair and Irāmaṉ knows it; it shows how deeply he is shaken.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' iṉṟē iṟavātu oḻiyēṉ; emarō,
poṉṟātu oḻiyār, pukalvār uḷarāl;
oṉṟākiya uṉ kiḷaiyōrai elām
koṉṟāy; koṭiyāy! ituvum kuṇamō? ''