கம்பராமாயணம் 3714 · ஆரணிய 9.87

Section ஆரணிய காண்டம் / 9. அயோமுகிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''
பாட வேறுபாடு · Project Madurai reads
1'' ஆய்வு உறு பெரும் கடல் அகத்துள் ஆயவன் ,
பாய் திரை வருதொறும் பரியற் பாலனோ ?
தீவினைப் பிறவி வெம் சிறை இல் பட்டயாம் ,
நோய் , உறுதுயர் என நுடங்கல் நோன்மையோ ? ''

பொருள் · Meaning in Tamil

ஆய்வுறு பெருங் கடல் அகத்துள் ஏயவன் - (அளவில்லாதது என்று) ஆய்ந்து கூறுகிற பெரிய கடலின் நடுவில் கப்பலைச் செலுத்துபவன்; பாய்திரை வருதொறும் பரிதற் பாலனோ - பாய்கிற அலைகள் வரும் போதெல்லாம் வருந்துவதற்கு உரியவனோ? (அவ்வாறு வருந்துவதற்கு உரியவன் அல்லன் என்றபடி); தீவினைப் பிறவி வெஞ் சிறையில் பட்ட - தீவினையாகிய பிறவி என்கிற கொடிய சிறையில் அகப்பட்ட, யாம் - நாம்; நோய் உறுதுயர் என - வருத்தம் பொருந்திய துன்பம் என்று; நுடங்கல் - (மனம்) தளர்தல்; நோன்மையோ - பெருமையோ? (என்று இராமன் இலக்குவனிடம் கூறினான்).

இன்னலும் உவகையும் அடைந்த இராமன், மனம் தேறி இவ்வாறு இலக்குவனுக்கு ஆறுதல் கூறினான் எனக் கொள்க. பிறவியாகிய பெருஞ்சிறைப்பட்ட நாம் வருந்தித் துன்புறுதலால் எந்தப் பயனும் இல்லை. எனவே, அரக்கி கையில் அகப்பட்ட துன்பத்துக்கு வருந்த வேண்டா என இராமன் கூறினான் என்க. வாழ்வியல் நெறி விளக்கமும் தத்துவ நயமும் செறிந்த பாடல் இது. ஏயவன் - அகப்பட்டவன் எனவும் பொருள் கூறலாம். பரிதல் - வருந்துதல், நோய் - வருத்தம். நுடங்கல் - தளர்தல். பாய் திரை - வினைத்தொகை. பிறவி வெஞ்சிறை - உருவகம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Should one who sails in the midst of the vast ocean that men measure and cannot fathom
  2. be distressed every time a leaping wave comes?
  3. For us, caught in the cruel prison of birth that springs from evil deeds,
  4. to sag at heart, calling things pain and sorrow: is that strength?'

What the poem says

Irāmaṉ steadies himself and comforts Ilakkuvaṉ with a philosophical image. A sailor on the open sea should not panic at every wave; waves are what the sea is made of.

In the same way, those who live in the prison of embodied existence, the result of past deeds, should not crumple at each trouble. Ilakkuvaṉ need not be upset by what the demoness did to him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' āyvuṟu peruṅ kaṭal akattuḷ ēyavaṉ,
pāy tirai varutoṟum paritaṟpālaṉō?
tīviṉaip piṟavi veñ ciṟaiyil paṭṭa yām,
nōy, uṟu tuyar eṉa nuṭaṅkal nōṉmaiyō? ''