கம்பராமாயணம் 3715 · ஆரணிய 9.88

Section ஆரணிய காண்டம் / 9. அயோமுகிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''
பாட வேறுபாடு · Project Madurai reads
1'' மூவகை , உலகமும் , அமரர் மூவரும்
மேவ அரும் பகை எனக்கு ஆக மேல்வரின் ,
ஏவரே கடப்பவர் ? எம்பி ! நீ உளை
ஆவதே வலி ; இனி , அரணும் வேண்டுமோ ? ''

பொருள் · Meaning in Tamil

மூவகை அமரரும் - (படைத்தல், காத்தல், அழித்தல்) என்ற முத்தொழிலைச் செய்கின்ற தேவர்களான (பிரமன், விஷ்ணு, சிவன் ஆகியவர்களும்; மும்மை உலகமும் - (மேல், கீழ், நடு என்று) மூன்று வகையான உலகத்தில் வாழ்பவர்களும், மேவ அரும் பகை எனக்கு ஆக மேல்வரின் - நெருங்கிக் கடத்தற்கரிய பகைவர்களாக என்னை எதிர்த்து வந்தாலும், ஏவரே கடப்பவர்? - (என்னை வஞ்சியாமல் எதிர் நின்று வெல்ல வல்லவர் யாவர்?; எம்பி - என் தம்பியே; நீயுளை ஆவதே வலி - நீ என்பக்கலில் இருப்பதே (எனக்கு) வலிமை; இனி - இனிமேல்; அரணும் வேண்டுமோ - (நீ யன்றி) (எனக்கு) வேறு ஒரு காவலும் வேண்டுமோ?

மூவரும் மூவகை உலகத்தவரும் எதிர்த்து வரினும் நீ எனக்கு வலிமையாகவும், அரணாகவும் இருக்கிறபடியால் என்னை எவராலும் வெல்ல முடியாது என்ற வாறு. "தம்பி உடையான் படைக்கு அஞ்சான்" என்ற பழமொழியையும் ஈண்டு நினைவில் கொள்க. இந்திரசித்தின் தலையை இராமன் திருவடிகளில் வைத்து இலக்குவன் வணங்கிய போது, 'தம்பி உடையான் பகை அஞ்சான் என்னும் மாற்றம் தந்தனையால்' (9183) என்று இராமபிரான் கூறுவது இங்கு நினையத்தக்கது. மூவகை அமரர் - முத்தொழில் இயற்றும் பிரமன், திருமால், சிவன் ஆகியோர். மூவுலகு - விண்ணுலகு, மண்ணுலகு, பாதாள உலகு என்பவையாகும். மேவுதல் - நெருங்குதல். ஏவர் - யாவர். கடத்தல் - வஞ்சியாது எதிர் நின்று பொருது வெல்லல். எம்பி - மரூஉமொழி. அரணும் - உம்மை உயர்வு சிறப்பு உம்மை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'If the three kinds of gods and the three worlds
  2. should rise up against me as foes hard to withstand,
  3. who could ever overcome me? My brother, that you are with me
  4. is my strength; what other fortress do I need?'

What the poem says

Irāmaṉ tells Ilakkuvaṉ what he means to him. Even if the three great gods, the creator, the preserver and the destroyer, and all three worlds came against him together, no one could defeat him in open battle, because Ilakkuvaṉ is at his side.

His brother is his strength and his fortress. The commentary recalls the proverb 'one who has a younger brother need not fear an army', which Irāmaṉ himself quotes much later when Ilakkuvaṉ lays the head of Intiracittu at his feet.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' mūvakai amararum, mummai ulakamum
mēva arum pakai eṉakku āka mēlvariṉ,
ēvarē kaṭappavar? empi! nī uḷai
āvatē vali; iṉi, araṇum vēṇṭumō? ''