கம்பராமாயணம் 3716 · ஆரணிய 9.89
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வார் கழல் - நீண்ட வீரக் கழல் அணிந்த; செரு வலி வீர - போர் வலி படைத்த வீரனே; பிரிபவர் யாவரும் பிரிக - (என்னைத் தனியே விட்டுப்) பிரிகின்றவர்கள் எல்லோரும் பிரிந்து செல்க; பேர்இடர் வருவன யாவையும் வருக - பெருந்துன்பங்களாக வருகின்றவை எல்லாம் வருக; நின் தீரும் அல்லது - அவை எல்லாம் உன்னால் நீங்குமே அல்லாது; என் வயின் - என்னிடம்; (இனிமேல்); பருவரல் - துன்பம்; பயிலற் பாலதோ - தங்கி வருத்தும் தன்மையதோ? அன்று.
யார் என்னை விட்டுப் பிரிந்தாலும் எத்துன்பம் நேர்ந்தாலும் அவை உன்னால் தீர்ந்துவிடும். நீ என்னுடன் இருத்தலால் எவ்வகைத்துன்பமும் எனக்கு நேராது என்றபடி.
திண்பொருள் எய்த லாகும்; தெவ்வரைச் செகுக்க லாகும்; நண்பொடு பெண்டிர் மக்கள் யாவையும் நண்ணலாகும்; ஒண்பொரு ளாவது, ஐயா, உடன் பிறப்பு ஆக்கலாகா - எம்பியை ஈங்குப் பெற்றேன் என் எனக்கு அரியது என்றான்.
(சீவக சிந்தாமணி. 1760) என்ற பாடலையும் ஒப்பிடலாம். பருவரல் - துன்பம். பயிலல் - தொடர்ந்து தங்கி இருத்தல். பேர் இடர் - பண்புத் தொகை. வருவன - வினையாலணையும் பெயர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Let all who would leave me leave; let every great trouble
- that is coming come; O hero mighty in war, with your long war-anklets,
- since through you all of it comes to an end,
- can sorrow ever settle in me and stay?'
What the poem says
Irāmaṉ goes on: let anyone who wants to leave him leave, and let every calamity come. As long as Ilakkuvaṉ is with him, all of it will be removed, and no sorrow can take root in him.
The commentary compares a verse from the Jain epic Cīvaka Cintāmaṇi: wealth, victory over enemies, friends, wife and children can all be won, but a brother cannot be made; having found his brother again, the hero says nothing is beyond him.