கம்பராமாயணம் 3717 · ஆரணிய 9.90

Section ஆரணிய காண்டம் / 9. அயோமுகிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
'
''

பொருள் · Meaning in Tamil

வன் தொழில் வீர - வலிய போர்த் தொழில் வல்ல வீரனே; போர் வலி அரக்கியை - போர்த் தொழிலில் வல்லவளாகிய அரக்கியை; போர் வென்று மீண்டனென் - போரில் வெற்றி பெற்றுத் திரும்பினேன்; என விளம்பினாய் - என்று மட்டும் சொன்னாய்; புகன்ற சீற்றத்தால் - பெரியோர்கள் சொன்ன (நெறிப்படியான) சினத்தால்; புன் தொழில் அனையவள் - இழி தொழிலை உடைய அவளை; கொன்றிலை போலும் கூறுவாய் - கொல்லாமல் விடுத்தாய் போலும்'; என்றான் - என்று இராமபிரான் சொன்னான். (ஆல் - அசை).

சிற்றினத்தாரைச் சேரும் சினம் நெறிமுறை அறியாது; சீரொழுகு, சான்றோர் சினம் நெறிமுறை பிறழாது. 3632 ஆம் பாடலில் இதனை மனு நெறி என இராமன் சுட்டுதல் காண்க. பெண் என மனத்திடை பெருந்தகை நினைவதால், சான்றோர் சினமடங்கல் பற்றிப் புகன்றவை இலக்குவன் செயலில் நெறிமுறை பேணப்பட்டது. பெண் கொலை என்பது சின உச்சத்திலும் ஏலாச் செயல் என்பது சான்றோர் புகன்றது. தாடகை வதையின் போது முதலில் பெண் என இராமபிரான் நினைத்ததும், கோசிகன் விளக்கத்தை ஏற்றுப் பின் வதைத்ததும் வேறு பின்னணியில் கணிக்கத் தக்கது. 'பெண் நாட்டம் ஒட்டேன், இனிப் பேருலகத்துள்' (1723) என்று அயோத்தியில் பொங்கிய சினம். அப்போது தென் சொல் கடந்தானும் வடசொற் கலைக்கு எல்லை தேர்ந்தானும் (1741) ஆகிய இராமபிரானால் தணிந்தது. இப்போது ஆரணியத்தில் இராமபிரான் தணிக்கத் தேவை இல்லாமலே இலக்குவனின் சினம் நெறி பேணியது. முன்னைச் சினம் இராமபிரானுக்கு ஏற்பட்டதாக இலக்குவன் கருதிய குறையால் விளைந்தது என்பதையும், இங்கு எழுந்த சினம் பகவத் கைங்கரியத்துக்குத் தடை எழுந்ததால் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். உறங்காவில்லியின் சின வீக்கமும் நீக்கமும் ஆழ நினைதற்கு உரியன. சூர்ப்பணகையும் அயோமுகியும் இலக்குவனால் உறுப்பிழந்த இணைக் கதைப் பாத்திரங்களாவர். பெண் காமமும், ஆணின் வரன் முறை மீறிய கழி காமமும் பெருந்துன்பமும் அழிவும் தரும் என்பதை இராமாயணம் கொண்டு உணர்க. வன் தொழில் - பண்புத் தொகை, வீர - அண்மை விளி, மீண்டனென் - தன்மை ஒருமை வினைமுற்று. புகன்ற - செய்த என்னும் வாய்பாட்டு இறந்தகாலப் பெயரெச்சம். ஆல் - அசை. போலும் - ஒப்பில் போலி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Hero of mighty deeds, you said, "I overcame
  2. the demoness, strong in war, and came back from the fight";
  3. it seems that, with the measured anger the wise prescribe,
  4. you did not kill her, base as her deeds are? Tell me,' he said.

What the poem says

Irāmaṉ notices that Ilakkuvaṉ only said he had beaten the demoness, and asks: did you spare her life, holding your anger within the limits the wise lay down?

Killing a woman is something the wise forbid even in the height of rage. Ilakkuvaṉ, like Irāmaṉ with Cūrppaṇakai, punished her by maiming rather than killing. The commentary contrasts this with Ilakkuvaṉ's uncontrolled fury in Ayōttī over Irāmaṉ's exile, which Irāmaṉ had to calm; here his anger kept to the rules by itself.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' vaṉ toḻil vīra!' pōr vali arakkiyai
veṉṟu pōr mīṇṭaṉeṉ ' eṉa viḷampiṉāy;
puṉ toḻil aṉaiyavaḷ pukaṉṟa cīṟṟattāl
koṉṟilaipōlumāl? kūṟuvāy '' eṉṟāṉ.