கம்பராமாயணம் 3718 · ஆரணிய 9.91

Section ஆரணிய காண்டம் / 9. அயோமுகிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''
பாட வேறுபாடு · Project Madurai reads
1'' துளைபடு மூக்கொடு செவி துமித்து உகத்
தளை வயின் நகிலொடு தடிந்து நீக்கிய
அளவையில் , பூசலிட்டு அரற்றினாள் '' என
இளையவன் , விளம்பி நின்று இருகை கூப்பினான் .

பொருள் · Meaning in Tamil

துளைபடு மூக்கொடு - (அந்த அரக்கியினது) துவாரம் பொருந்திய மூக்குடன்; செவி - காதுகளையும், வளை எயிறு - வளைந்த பற்களையும்; இதழோடு - இதழ்களையும்; துமித்து உக - துண்டுபட்டு விழும்படி; அரிந்து - அறுத்து; மாற்றிய அளவையில் - நீக்கிய போது; பூசலிட்டு அரற்றினாள்' என - (அவள்) பேரொலி செய்து கதறினாள் என்று; விளம்பி நின்று - கூறி நின்று; இளையவன் - இளையவனாகிய இலக்குவன்; இருகை கூப்பினான் - (தன்) இரண்டு கைகளையும் கூப்பி நின்று (இராமனை) வணங்கினான்.

அரக்கியின் மூக்கு முதலியவற்றை அரிந்ததனால் அவள் அவலப் பேரொலி இட்டாள் என இலக்குவன் கூறி இராமனை வணங்கினான். அவலப் பேரொலி கேட்டு இரக்கம் கொண்ட இலக்குவன் உயிர் செகுக்காது விடுத்தனன் போலும். இப்பாடலில் இலக்குவன் அயோமுகியின் மூக்கு, செவி, எயிறு, இதழ் ஆகியவற்றை அறுத்து நீக்கிய செய்தி கூறப்படுவதால், இப்படலத்தில் உள்ள 86ஆம் பாடலில் வரும்.

என்னை இங்கு எய்தியது? இயம்புவாம் என அன்னவன் அஃது எலாம் அறியக் கூறலும். (3626) என்ற வரிகளுக்கு மூக்கு முதலியவற்றை நீக்கியதை ஒழித்துப் பிற செய்திகளைப் பொருளாகக் கொள்க. அங்குத் தொகுத்துப் பொதுவாகக் கூறியவர் இங்கு விரித்து பப்ப என்க. துமித்து - துண்டுபட்டு. அளவை - பொழுது, பூசல் - பேரொலி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Her nose with its nostrils, and her ears, I cut away so they fell,
  2. and her curved teeth together with her lips I sliced off and removed;
  3. at that she raised an outcry and wailed," so
  4. the younger brother told, and stood with both hands joined in reverence.

What the poem says

Ilakkuvaṉ has just dealt with Ayōmukhi, the demoness who seized him in the night and tried to carry him off as her husband. Instead of killing her, he cut off her nose, ears, teeth and lips, and she ran off screaming. Now he reports this to Irāmaṉ and salutes him with folded hands.

The commentary suggests that her pitiful cries moved him to spare her life, and notes that an earlier verse only summarized what he told his brother; here the detail is spelled out.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' tuḷaipaṭu mūkkoṭu cevi tumittu uka,
vaḷai eyiṟu itaḻoṭu arintu māṟṟiya
aḷavaiyil, pūcaliṭṭu araṟṟiṉāḷ '' eṉa
iḷaiyavaṉ, viḷampiniṉṟu iru kai kūppiṉāṉ.