கம்பராமாயணம் 3719 · ஆரணிய 9.92
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உவகையின் பொருமி விம்முவான் - மகிழ்ச்சியால் உடல் பூரித்து விம்மலுற்றவனாகிய (இராமன்); தொல் இருள் - முதிர்ந்த இருட்டில்; தனை - உன்னை; கொலத் தொடர்கின்றாளையும் - கொல்லத் தொடர்ந்து வந்த அரக்கியையும்; நீ - நீ; கொல்லலை - கொல்லாமல்; நாசியைக் கொய்து நீக்கினாய் - மூக்கையும் (பிற உறுப்புகளையும்) அறுத்து நீக்கி விட்டாய்; மனு முதல் மரபினோய் - மனுவை முதலாகக் கொண்ட மரபு வழி வந்தவனே!; வல்லை நீ - (இச் செயல் மரபுக் கேற்ற) வன்மை உடையவன் நீ; என - என்று இராமன் கூறி; புல்லினன் - இலக்குவனைத் தழுவினான்.
பெண் கொலை செய்யாது அவளைத் தம்பி தண்டித்ததை அறிந்த இராமன், "மனு முதல் மரபினோய் வல்லை" என்று கூறிப் புல்லினன் என்க. தொல் இருள் - முதிர்ந்த இருள். தனை - உன்னை. மனு முதல் மரபு - மனு, கதிரவனின் மகன். இவனை முதலாகக் கொண்டே சூரிய குலத்தரசர்கள் மனு முதல் நெறியினோர் எனப்பட்டனர் இவனே குல முதல்வன் என்க. இவன் வைவ சுவதமனு எனப்படுவான். கொல் - இடைக்குறை. தொடர்கின்றாளை - வினையாலணையும் பெயர்; காலவழுவமைதியும் ஆகும், இங்கு இறந்த காலம் நிகழ்காலமாகச் சுட்டப்பட்டுள்ளமை அறிக.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Even her who pursued you to kill you in the deep darkness
- you did not kill; you cut off her nose and sent her away.
- You are truly strong, you of the line that begins with Maṉu!" Saying this,
- he embraced him, swelling with joy and sobbing.
What the poem says
Irāmaṉ responds to Ilakkuvaṉ's report with joy. His brother had punished the demoness without killing her, keeping the rule that a warrior does not kill a woman, and Irāmaṉ praises this as worthy of their solar dynasty, which traces its descent from Maṉu, son of the Sun. Overcome, he hugs his brother, his chest heaving with emotion.