கம்பராமாயணம் 3720 · ஆரணிய 9.93
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வீரனும் - வீரனாகிய இராமனும்; தம்பியும் - தம்பியாகிய இலக்குவனும்; பேர அருந்துயர் - நீக்க முடியாத பெருந்துன்பத்தை, அறப் பேர்ந்துளோர் என - முழுதும் நீக்கியவர் என்னுமாறு (அரக்கியால் ஏற்பட்ட துன்பத்தை நீக்கி); வாருணம் நினைந்தனர் - வருண மந்திரத்தை எண்ணினர்; வான நீர் உண்டு - (அதனால்) வானத்தில் இருந்து கிடைத்த நீரைப் பருகி; விடிவு நோக்குவார் - பொழுது விடியும் காலத்தை எதிர் நோக்கியவர்களாய்; தாரணி தாங்கிய - நிலத்தைத் தாங்கிக் கொண்டுள்ள; கிரியில் தங்கினார் - ஒரு பெரிய மலையில் தங்கி இருந்தார்கள்.
இராமனும் தம்பியும் நீக்க முடியாத துன்பத்திலிருந்து விடுபட்டவர்களாகி, வருண மந்திரம் சொல்லி அதனால் கிடைத்த வான நீரைப் பருகிப் பொழுது விடியும் காலத்தை எதிர்நோக்கி ஒரு பெரிய மலையில் தங்கி இருந்தனர். பேரஅரும் - நீக்குதற்கு அரிய. அற - முழுமையாக. வாருணம் - வருண மந்திரம். அருந்துயர் - பண்புத்தொகை, பேர்ந்துளோர் - வினையாலணையும் பெயர். நோக்குவார் - முற்றெச்சம். வானநீர் - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like men who have wholly escaped a great and hard sorrow,
- the hero and his younger brother, waiting for the dawn,
- called to mind the spell of Varuṇa, drank the water of the sky,
- and stayed upon a mountain that holds up the earth.
What the poem says
The danger from the demoness is over, and the two brothers rest for the remainder of the night. By reciting a mantra addressed to Varuṇa, god of the waters, they draw rain from the sky to drink. They then settle on a great hill to wait for daybreak, as though relieved of a heavy burden, though Irāmaṉ's deeper grief for Cītai remains, as the next verses show.