கம்பராமாயணம் 3721 · ஆரணிய 9.94
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வீரன் - வீரனாகிய இராமன்; கல் அகல் வெள்ளிடை - கற்கள் பரந்துள்ள வெளியிடத்தில்; கானின் நுண்மணல் - காட்டில் உள்ள நொய்மையான மணல்; பல்லவம் - தளிர்கள்; மலர்கொடு - (மற்றும்) மலர்கள் ஆகியவை கொண்டு (இலக்குவன்), படுத்த பாயலின் - அமைத்த படுக்கையில், எல்லை இல் துயரினோடு இருந்து - அளவற்ற பெருந்துன்பத்தோடு இருந்து; மெல் அடி - (தனது) மென்மையான பாதங்களை; இளையவன் வருட - இளையவன் ஆகிய இலக்குவன் மெதுவாகத் தடவ; சாய்ந்தனன் - பள்ளி கொண்டான். ஏ - ஈற்றசை.
இராமன் வெட்ட வெளியில் மணல், தளிர்கள், மலர்கள் ஆகியவற்றைக் கொண்டு இலக்குவன் அமைத்த படுக்கையில், அவன் மெத்தெனத் திருவடி வருடப் பள்ளி கொண்டான். வெள்ளிடை - மேல் மறைவில்லாத இடம், வெட்ட வெளி என்ப. பல்லவம் - தளிர். படுத்த - அமைத்த, பரமனுக்குப் பாகவதன் செய்யும் கைங்கர்யத்தை ஈற்றடியால் கூறினார். இதில் உடன்பிறப்புப் பாசம் நிறைந்து உள்ளமையையும் எண்ணுக. கொடு - இடைக்குறை. மெல் அடி - பண்புத்தொகை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- On fine forest sand, in an open space strewn wide with stones,
- on a bed laid out with tender shoots and flowers,
- he lay down, together with a sorrow that had no limit,
- while the younger one stroked his soft feet: the hero did.
What the poem says
Ilakkuvaṉ makes a bed for Irāmaṉ in the open, out of sand, young leaves and flowers, and gently massages his brother's feet as he lies down. The commentary sees in the last line the loving service a devotee offers to the Lord, and also the plain affection between brothers. Irāmaṉ rests, but with endless grief for his lost wife.