கம்பராமாயணம் 3722 · ஆரணிய 9.95

Section ஆரணிய காண்டம் / 9. அயோமுகிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மயில் இயல் பிரிந்த பின் - (இராமன்) மயில் போன்ற சாயலை உடைய சீதையைப் பிரிந்த பிறகு; மான நோயினால் - அவமானமாகிய நோயினால், ஒரு பொருள் அயில் விலன் - எந்த ஒரு பொருளையும் உண்ணவில்லை; அவலம் எய்தலால் - துன்பம் மிகுதி ஆனதால், துயில் விலன் - உறக்கம் கொண்டானில்லை; என்பது சொல்லற்பாலதோ - என்ற செய்தியைச் சொல்ல வேண்டுமோ?; நெடிது உயிர்ப்பிடை உயிர் ஊசல் ஆடுவான் - பெருமூச்சின் இடையே உயிர் ஊசலாடப் பெறுவானாயினன்.

சீதையைப் பிரிந்த அவமானமாகிய நோய் காரணமாக இராமன் உண்ணவுமில்லை, உறங்கவுமில்லை. பெருமூச்சினால் உயிர் போவது வருவதாய் இருந்தது என்றவாறு. இயல் - சாயல், அயில்தல் - உண்ணல், மயில் இயல் - உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. மானநோய் - உருவகம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. After he was parted from her of the peahen's grace, through the sickness of shame
  2. he ate not a single thing; since he was sunk in anguish,
  3. that he did not sleep, need that even be said?
  4. His life swung to and fro between his long, deep sighs.

What the poem says

This verse describes Irāmaṉ's state since Cītai was taken from him. He feels her loss as a disgrace as well as a grief, and the poet calls this shame a disease. He has stopped eating, and of course he cannot sleep. His heavy sighs seem to carry his life away and back again, like a swing. "Her of the peahen's grace" is a standard epithet for a graceful woman, here Cītai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mayil iyal pirintapiṉ māṉa nōyiṉāl,
ayilvilaṉ oru poruḷ; avalam eytalāl,
tuyilvilaṉ eṉpatu, collaṟpālatō?
uyir, neṭitu uyirppiṭai, ūcalāṭuvāṉ.