கம்பராமாயணம் 3758 · ஆரணிய 10.30

Section ஆரணிய காண்டம் / 10. கவந்தன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
'
' ''

பொருள் · Meaning in Tamil

மானே அன்னாள் தன்னொடு - மானை ஒத்தவளாகிய அண்ணியாரோடு, தம்முன் - தமையனாகிய இராமன்; வரை ஆரும் கானே வைக - மலை இடையிட்ட காட்டிலே வாழ; கண்துயில் கொள்ளாது - தான் மட்டும் தூக்கம் மேற்கொள்ளாமல்; அயல் - பக்கத்தே இருந்து; காத்தற்கு ஆனான் - காவல் புரிவதற்கு ஏற்று நின்றான் இலக்குவன்; என்னே - என்ன வியப்பு!"; என்றவர் முன்னே' - என்று என் பணியை வியந்து போற்றிப் பேசியவர்கள் முன்னிலையில்; "அவர் இன்றித் தானே வந்தான் - அந்த இருவரும் இல்லாமல் இந்த இலக்குவன் மட்டுமே தனியாக வந்திருக்கிறான்"; என்றலின் - என்று பேசப்படுவதைவிட; வேறு ஓர் தவறு உண்டோ - வேறு ஒரு தவறு இருக்க முடியுமா?

அல்லை ஆண்டு அமைந்த மேனி அழகனும் அவளும் துஞ்ச... கங்குல் எல்லை காண்பு அளவும் நின்றான்' (2344), இமைத்தில இராமன் என்னும் புண்ணிய கண்ணும் வன்தோள் தம்பி கண் போன்ற அன்றே' (3345) என முன்பு வந்த தொடர்களும் உறங்கா வில்லியாகிய இலக்குவன் தன்மையை விளக்கின. வீடணனுக்குப் படைக்கலம் தந்து ஏற்றபோது இராமபிரானே இலக்குவனைத் 'துஞ்சுதல் இல் நயனத்து ஐய' (4505) என்று குறிப்பிடுவான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "'While his elder brother lived with her who is like a doe in the hill-filled forest,
  2. he never let his eyes sleep but stood guard close by;
  3. how wonderful!' So they said; and before those people, 'Without the two of them
  4. he has come back on his own': could any fault be worse than to have that said?"

What the poem says

Ilakkuvaṉ continues his reply. People have praised him for keeping watch, sleepless, over Irāmaṉ and Cītai throughout the exile. How could he now face those same people and have them say that he came home alone, without the two he was guarding? Nothing could be more shameful.

The commentary recalls earlier verses in which Ilakkuvaṉ stands guard all night, and a later one in which Irāmaṉ calls him the one whose eyes never sleep.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' 'māṉē aṉṉāḷtaṉṉoṭu tammuṉ varai ārum
kāṉē vaikak kaṇtuyil koḷḷātu ayal kāttaṟku
āṉāṉ, eṉṉē! ' eṉṟavar muṉṉē,' avar iṉṟit
tāṉē vantāṉ ' eṉṟaliṉ vēṟu ōr tavaṟu uṇṭō? ''