கம்பராமாயணம் 377 · பால 7.47
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கைவரை எனத்தகையகாளை - துதிக்கையையுடைய மலையை ஒத்ததான யானை போன்றவனும், காளையை ஒத்தவனுமாகிய இராமன்; உரைகேளா - உரையைக் கேட்டு; ஐவரை அகத்திடை அடைத்தமுனி - இந்திரியங்கள் ஐந்தினையும் மனத்தில் அடக்கியமுனிவன்; ஐய! அவள் இருப்பது இவ்வரை - இராம அந்தத் தாடகை இருப்பது இந்த மலைதான்; என்பதனின் முன்பு - என்று சுட்டிக் காட்டுவதற்கு முன்பாக; ஓர்மைவரை நெருப்பு எரிய - ஒரு கரியமலை, உச்சியில் நெருப்பு எரிந்து கொண்டிருக்க; வந்தது என வந்தாள் - எதிரில் வந்தது போலத் தாடகை எதிரே வந்தாள்.
கைவரை: கையையுடைய மலை (அதாவது யானை). உவமை ஆகுபெயராய் ராமனை உணர்த்தும். ராமனுக்குக் காளை உவமையாம். உரை: முதனிலைத் தொழிற்பெயர் கேளா: செயா என்ற வாய்பாட்டு வினையெச்சம். ஐவர்: ஐந்து இந்திரியங்கள். அர்: சிறப்பு விகுதி. அகம்: மனம். “ஓர் மைவரை நெருப்பு எரிய வந்தது” என்பது உருவகம். மை: கருமை. இத்தொழில் இயற்றுபவள் எங்கு உறைவது எனக்கேட்ட இராமபிரானுக்கு 'அவள் இருப்பது இவ்வரை' என முனிவன் கூறுவதற்கு முன் தாடகை எதிரே வந்தாள் என்பது பொருள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Hearing the words of that young bull, worthy to be called an elephant,
- the sage who had shut the five senses up within his mind began: Sir,
- this hill is where she lives; but before he could say it,
- she came, as if a black mountain had come with fire blazing on it.
What the poem says
Vicuvāmittiraṉ, who has mastered his five senses, starts to answer Irāmaṉ, a prince likened to an elephant (a "mountain with a trunk") and to a young bull. He is about to point out the hill where Tāṭakai lives when she appears in person before he can finish.
She looks like a black mountain moving toward them with fire burning at its top, her dark bulk crowned by blazing eyes and hair.