கம்பராமாயணம் 378 · பால 7.48

Section பால காண்டம் / 7. தாடகை வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சிலம் புகள் சிலம்பு இடை செறித்த கழலோடு
நிலம் புக மிதித்தனள்; நெளித்த குழி வேலைச்
சலம் புக, அனல் தறுகண் அந்தகனும் அஞ்சிப்
பிலம் புக, நிலை கிரிகள் பின் தொடர, வந்தாள்.

பொருள் · Meaning in Tamil

சிலம்புகள் சிலம்பிடை செறித்த கழலோடும் - கால்களில் அணிந்த சிலம்புகளுக்கிடையே மலைகளைச் செறியும்படி வைத்த கால்களோடும்; நிலம்புக மிதித்தனள் - நிலம் கீழே புகும்படி மிதித்தாள்; நெளித்த குழி வேலைச்சலம் புக - அதனால் நெளியப்பெற்ற குழியில் கடல் நீர்புகவும்; அனல்தறுகண் அந்தகனும் - நெருப்பென விழிக்கும் வலிமைமிக்க எமனும்; அஞ்சிப் பிலம்புக - பயந்து, குகையில் புகுந்து ஒளியவும்; நிலக்கிரிகள் பின்தொடர வந்தாள் - நிலத்திலுள்ள மலைகளெல்லாம் பின்னே தொடர்ந்து வரவும் தாடகை வந்தாள்.

சிலம்புகள்: மலைகள் சிலம்பு; பாதச் சிலம்பு. செறித்த; அமைத்த; மலைகளைப் பதித்துச் செய்த காற்சிலம்புகளை அணிந்திருக்கிறாள் என்பது கருத்து. கழல்: பாதம். நெளித்து: நெளியச் செய்த (பிறவினை. அந்தகன்: எமன். பிலம்: குகை. பாதத்தால் நிலம் கீழே செல்ல மிதித்தாள். அதனால் உண்டான குழியில் கடல் நீர்வந்து புகுந்தது. எமனும் அவளைக் கண்டு அஞ்சியோடி குகையில் சென்று ஒளியலானான். நிலத்திலுள்ள மலைகளெல்லாம் தன்னைப் பின் தொடர்ந்துவர, அவ்வரக்கி வந்தாள் என்பதாம். சலம்: நீர் தறுகண்: வலிமை. தாடகையின் வருகையையும், அவளது தோற்றத்தையும் இவ்வாறு புனைந்து கூறுகிறார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With feet whose anklets had hills set into them,
  2. she stamped so that the ground sank in; the sea's water poured into the hollows she pressed down;
  3. even Death, with his fiery, ruthless eyes, took fright and hid in a cavern;
  4. the hills of the earth followed behind her as she came.

What the poem says

Tāṭakai's approach is drawn on a cosmic scale. Her anklets are studded with whole hills; tilampu means both hill and anklet, and the poet uses the pun. Every step drives the ground down so deep that the ocean rushes into her footprints.

Yamaṉ, the god of death, flees and hides in a cave at the sight of her, and the hills seem to trail after her as she strides forward.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cilampukaḷ cilampiṭai ceṟitta kaḻalōṭum
nilam puka mitittaṉaḷ; neḷitta kuḻi vēlaic
calam puka, aṉal taṟukaṇ antakaṉum añcip
pilam puka, nilak kirikaḷ piṉ toṭara, vantāḷ.