கம்பராமாயணம் 379 · பால 7.49

Section பால காண்டம் / 7. தாடகை வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இறை கடைதுடித்த புருவத்தள் - சிறிது கடைப்பாகம் துடிக்கின்ற புருவத்தை உடையவளும்; எயிறு என்னும் பிறை கடை பிறக்கிட - பற்கள் என்னும் சந்திரப் பிறைகள் கடைப்பகுதி விளக்கமுறும்படி; மடித்த பிலவாயள் - மடித்துக் கொண்ட குகை போன்ற வாயை உடையவளுமான; மறைக் கடை அரக்கி - மறை நெறியின் வரம்பு கடந்த அரக்கியான அந்தத் தாடகை, வடவைக்கனல் இரண்டாய் - வடவைத் தீ இரண்டு கூறாகி; நிறைக்கடல் முளைத்தென - நீர்நிறைந்த கடலில் முளைத்தது என்று கூறும்படி வந்து; நெருப்பு எழ விழித்தாள் - கண்களில் நெருப்பு எழும்படி விழித்துப் பார்த்தாள்.

பிறக்கிட: பிறவினை. எயிறு: பற்கள். மறை நெறி கடந்தவள் என்பதால் “மறைக் கடையரக்கி” என்றார். “நிறைக்கடல்” தாடகையின் உடலுக்கும், “வடவைக் கனல் இரண்டு” அவளது கண்களுக்கும் உவமையாயின. சினத்தால் புருவங்களின் கடைதுடிக்க, பற்கள் என்னும் பிறைமதி பிறங்க, மடித்த குகை போன்ற வாயை உடையவளாய் - வடவைத்தீ இருகூறாகிக் கடலில் தோன்றியது போன்ற கண்களை உடையவளாய் நெருப்பெழ விழித்தாள் என்பது பொருள். இல்பொருள் உவமை (வடவைக் கடல் இரண்டு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Her brows twitching a little at their ends,
  2. her cave of a mouth curled back so that the crescent moons called fangs showed at the corners,
  3. the Rākṣasī who stands beyond the bounds of the Vedas glared, fire leaping from her eyes,
  4. as if the mare-fire beneath the sea had split in two and sprung up out of a brimming ocean.

What the poem says

A close-up of Tāṭakai's angry face. Her eyebrows twitch at the tips, her cavernous mouth is drawn back to bare fangs curved like crescent moons, and she glares with fire flaring from her eyes.

Her body is compared to a full ocean and her two eyes to the submarine mare-fire split into two blazes rising from it, a comparison to something that does not exist. She is called the demoness who has gone past the limits set by the Vedas.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṟaikkaṭai tuṭitta puruvattaḷ, eyiṟu eṉṉum
piṟaik kaṭai piṟakkiṭa maṭitta pila vāyaḷ,
maṟaik kaṭai arakki, vaṭavaik kaṉal iraṇṭu āy
niṟaik kaṭal muḷaitteṉa neruppu eḻa viḻittāḷ.