கம்பராமாயணம் 380 · பால 7.50
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கடம் கலுழ் தடங்களிறு - மதம் பொழிகின்ற பெரிய யானைகளை; கையொடு கை தெற்றா - ஒன்றன் துதிக்கை யோடு, மற்றொன்றன் துதிக் கையை முடித்து; வடம் கொள - மாலையாக அணிந்து கொண்டு இருப்பதால்; நுடங்கும் இடையாள் - அசைகின்ற இடையை உடையவளான அந்த அரக்கி; வானோர் இடங்களும் - விண்ணோர் வாழும் இடங்களும்; நெடும்திசையும் ஏழுலகும் - நெடிய திசைகளும், ஏழு உலகங்களும்; யாவும் அடங்கலும் நடுங்க - ஆகிய அனைத்தும் மற்றும் உயிர்கள் முழுதும் மயங்கி நடுங்கவும்; உரும் அஞ்சநனி ஆர்த்தாள் - இடியும் அஞ்சவும் மிகவும் ஆர்ப்பரித்தாள்.
கலுழ் களிறு: வினைத்தொகை. தெற்றா; தெற்றி. தெற்றா: செய்யா என்ற வாய்பாட்டு வினையெச்சம். நுடங்குதல்: அசைதல். மறுகி: கலங்கி. அடங்கலும்: முழுவதும். நனி: மிக. நனி: உரிச்சொல். மதம் பொழியும் யானைகளை ஒன்றன் துதிக்கையை மற்றொன்றன்துதிக்கையொடு முடிந்து தனது கழுத்தில் மாலையாக அணிந்திருக்கிறாள். இடை நுடங்க நடந்து வருகிறாள். வானுலகங்களும் திசைகளும் ஏழுலகங்களும் மற்ற யாவும் நடுங்க: இடியும் அஞ்சப் பெரு முழக்கம் செய்தாள் என்பது கருத்து. ஆர்த்தல்: முழங்குதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Great elephants streaming with must, trunk knotted to trunk,
- she wore as a necklace, she with a swaying waist; and so that, bewildered, the realms of the gods,
- the far quarters, the seven worlds and everything there is
- all trembled, and thunder itself took fright, she roared mightily.
What the poem says
Tāṭakai's necklace is a string of rutting elephants tied together by their trunks. The poet, with grim irony, gives her the conventional swaying waist of a heroine as she strides along.
Then she lets out a roar that shakes heaven, the directions and all seven worlds, so loud that thunder itself is afraid.