கம்பராமாயணம் 381 · பால 7.51
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இடிக்கும் மழை அன்னாள் - இடிக்கின்ற மேகத்தைப் போன்றவளான அந்தத் தாடகை என்னும் அரக்கி; ஆர்த்து அவரை நோக்கி - முழக்கமிட்டு, அம்மூவரையும் பார்த்து; நகைசெய்து எவரும் அஞ்ச - கோபச்சிரிப்புச் சிரித்து எவரும் அஞ்சும்படி; கூர்த்த நுதி முத்தலை அயில் கொடிய கூற்றைப் பார்த்து - கூர்மையான முனையை உடைய மூன்று கவடாக உள்ள தனது சூலமான கொடிய எமனைப் பார்த்தும் பின்; எயிறுதின்று பகுவாய் முழைதிறந்து - தனது பற்களைக் கடித்துக் கொண்டு வாயாகிய குகையைத் திறந்து; ஓர் வார்த்தை உரை செய்தனள் - ஒரு வார்த்தை சொல்லலானாள்.
ஆர்த்து: முழக்கமிட்டு. கூர்த்த: கூர்மைசெய்யப்பட்ட நுதி: முனை. முத்தலை அயில்: முக்கவட்டுச் சூலம். “கொடிய கூற்று” சூலத்தைக் கூற்றுவனாக உருவகித்தார். பார்த்து: ஒரு முறை பார்த்துக் கொண்டு என்பது பொருள். பகுவாய்: பெரியவாய். வாய்முழை: உருவகம் “அயில்” என்பதற்கு வேல் என்பது பொருள் ஆயினும் “முத்தலை அயில்” என்றதால் முக்கவட்டுச் சூலம் எனப்பொருள் கொள்ளப்பட்டது. “எவரும் அஞ்ச” இராமபிரானைத் தவிர மற்றைய எல்லோரும் அஞ்ச என்பது பொருள். ஒரு வார்த்தை: ஒரு சொல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- She roared, looked at them, and laughed so that all were afraid;
- she glanced at the cruel Death that was her three-headed spear with its sharpened points,
- gnashed her teeth, opened the cavern of her gaping mouth, and spoke
- a single word, she who was like a thundering rain-cloud.
What the poem says
Tāṭakai, dark and booming like a thundercloud, roars at the three travellers and gives a furious laugh that terrifies everyone except Irāmaṉ. She glances at her trident, a weapon so deadly the poet calls it Death itself, grinds her teeth and opens her cave-like mouth to speak. Her words follow in the next verse.